மரணித்துக் கிடக்கும் சுஷாந்த் சிங்.. போட்டோவை ஷேர் செய்யும் நபர்கள்.. வெளுத்து வாங்கும் பிரபலங்கள்!

சென்னை: நடிகர் சுஷாந்த் சிங் மரணித்துக் கிடக்கும் போட்டோ ஷேர் செய்யப்படுவதற்கு திரைத்துறையினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுக்க பிரபலமானவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். பீகாரை பூர்விகமாக கொண்டவர்.

சுஷாந்த் சிங்கின் தாய் கடந்த 2002ஆம் மரணமடைந்ததை தொடர்ந்து குடும்பத்துடன் டெல்லிக்கு குடிப்பெயர்ந்தனர். இவரது சகோதரர் நீரஜ் குமார் பாப்லு எம்.எல்.ஏ, இவரது மைத்துனர் பீகார் சட்டமன்றத்தில் எம்.எல்.சியாக உள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

சுஷாந்தின் தந்தை ஒரு மருத்துவர் ஆவார். 16 வயதில் தாயை இழந்த சுஷாந்தை அவரது தந்தையும் அவருடைய இரண்டு சகோதரிகளுமே வளர்த்து வந்தனர். தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற சுஷாந்த் சிங், பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். பின்னர் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.

Recommended Video

தாயின் Photo உடன் உருக்கமாக sushant போட்ட கடைசி பதிவு!
கடைசியாக தில் பெச்சரா..

கடைசியாக தில் பெச்சரா..

Kai Po Che! என்ற படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு அறிமுகமான சுஷாந்த், ஷுத் தேசி ரொமான்ஸ், ஆமிர்கானின் பிகே, ராப்தா, வெல்கம் டூ நியூயார்க், கேதார்நாத், சன்சிரியா, ச்ஹிஹோரே, ட்ரைவ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடைசியாக தில் பெச்சரா என்ற படத்தில் நடித்திருக்கிறார். அந்த படம் ரிலீஸ்க்காக காத்திருக்கிறது.

மரணித்து கிடக்கும் போட்டோ

மரணித்து கிடக்கும் போட்டோ

இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது பாந்த்ரா வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டார். அவரது மரணம் ரசிகர்கள் மத்தியிலும் திரைத்துறையினர் மத்தியிலும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் பெட்டில் மரணித்து கிடந்த போட்டோ ஒன்று சோஷியல் மீடியாவில் நேற்று முதல் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

பிரபலங்கள் கண்டனம்

பிரபலங்கள் கண்டனம்

பார்க்கும் போதே கண்ணீரை வர வழைக்கும் வகையில் உள்ளது இந்த போட்டோ. இந்நிலையில் இந்த போட்டோ ஷேர் செய்யப்படுவதற்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக நடிகை குஷ்பு பதிவிட்டுள்ள டிவிட்டில், சுஷாந்த் தனது அறையில் மரணித்துக் கிடக்கும் போட்டோ வலம் வருகிறது.

மனிதநேயத்தை காட்டுங்கள்

மனிதநேயத்தை காட்டுங்கள்

ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. நாம் அவ்வளவு உணர்ச்சியற்றவர்களாக இருக்க முடியாது. அவர்களின் தனிமைக்கு மதிப்பளியுங்கள், அவரது குடும்பத்தாரும் அன்பிற்குரியவர்களும் துக்கத்தை அனுசரிக்கவிடுங்கள். ஒருவரின் கடைசி தருணத்தை மதிப்புமிக்க உடைமையாக பகிர்ந்து கொள்ள இது நேரம் அல்ல. மனித நேயத்தை பச்சாதாபத்தையும் காட்டுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X