இன்ஸ்டா.. ஃபேஸ்புக் பதிவுகளை அதிரடியாக நீக்கிய சுஷாந்தின் சகோதரி.. காரணம் என்ன.. ரசிகர்கள் ஷாக்!
சென்னை: மறைந்த நடிகர் சுஷாந்தின் சகோதரி தனது இன்ஸ்டா மற்றும் பேஸ்புக் புரொஃபைல்களை டெலிட் செய்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்கிறது.
Recommended Video
தொலைக்காட்சியில் இருந்து பாலிவுட்டுக்கு அறிமுகமானவர் நடிகர் சுஷாந்த். தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தின் மூலம் நாடு முழுக்க பிரலமானார்.
கிரிக்கெட் வீரர் தோனி ரசிகர்களையும் தனது ரசிகராக்கிய நடிகர் சுஷாந்த் கடந்த ஞாயிற்றுக் கிழமை தற்கொலை செய்துக் கொண்டார். மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு வாழ்க்கையை முடித்துக்கொண்டார் சுஷாந்த்.

புளியை கரைக்கிறது
அவரது தற்கொலை ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுஷாந்தின் மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் சுஷாந்தை பிளாக் செய்த பாலிவுட் பிரபலங்கள் பலருக்கும் வயிற்றில் புளியை கரைக்க தொடங்கியுள்ளது.

உருக்கமான பதிவு
இந்நிலையில் சுஷாந்தின் சகோதரியான ஸ்வேதா சிங் கிர்த்தி அமெரிக்காவில் இருந்து இந்த வார தொடக்கத்தில் இந்தியா வந்தார். அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

உனக்கு கொடுத்திருப்பேன்
அதில் 'நீ மிகுந்த வேதனையில் இருந்தது எனக்குத் தெரியும். நீயொரு போராளி என்பதும் கடுமையாக போராடிக் கொண்டிருந்தாய் என்றும் தெரியும். உன் அனைத்து வலிகளுக்காகவும் வேதனைகளுக்காகவும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். என்னால் முடிந்திருந்தால், உன் வேதனைகளை எடுத்துக்கொண்டு எனது மகிழ்ச்சியை உனக்கு கொடுத்திருப்பேன் என உருக்கமாக தெரிவித்திருந்தார்.

புரொஃபைல் டெலிட்
மேலும் மற்றவர்கள் மீது கருணையையும் இரக்கத்தையும் காட்டுங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார். பின்னர் அந்த பதிவை நீக்கினார் ஸ்வேதா. இந்நிலையில் அவரது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் புரொஃபைல்கள் டெலிட் செய்யப்பட்டுள்ளன.

ஒன்றும் இல்லை
அவரது புரொஃபைல் டெலிட் செய்யப்பட்டதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரது இன்ஸ்டா மற்றும் பேஸ்புக் பக்கத்தில் அவரின் பெயரை தவிர வேறு ஒன்றும் இல்லை. போட்டோக்கள், வீடியோக்கள், அவரின் பதிவுகள் அனைத்தும் டெலிட் செய்யப்பட்டுள்ளது.

போலீசார் கூறியிருக்கலாம்
யாராவது கொடுத்த அழுத்தத்தின் பேரின் அவரது புரொஃபைல் டெலிட் செய்யப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனிடையே சுஷாந்த் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் அவருடைய பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா புரொஃபைலை போலீசார் லாக் செய்யும்படி கூறியிருக்கலாம் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











