Surya: சூர்யா பிறந்தநாளுக்கு தயாராகும் ரசிகர்கள்.. CDP ரெடி.. அடுத்தது?

சென்னை: நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் சிறப்பான அங்கமாக மாறியுள்ளார். பான் இந்தியா ஸ்டாராகவும் இருந்து வருகிறார்.

தயாரிப்பாளராகவும் உள்ள சூர்யா தற்போது பாலிவுட்டில் அக்ஷய் குமார் -சுதா கொங்கரா கூட்டணியில் சூரரைப் போற்று படத்தின் ரீமேக்கை தயாரித்து வருகிறார்.

தமிழில் சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் செப்டம்பர் மாதத்தில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Actor Suyas fans being ready to celebrate his birthday and CDP released

சூர்யா பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு தயாராகும் ரசிகர்கள்: நடிகர் சூர்யா 25 ஆண்டுகளை கடந்து திரையில் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார். பிரபல நடிகரின் மகன் என்ற அடையாளம் தனக்கு இருந்தபோதும், வெற்றிக்கு அதுமட்டும் போதாது என்ற தெளிவு சூர்யாவிடம் காணப்பட்டது. விளைவு நமக்கு ஒரு திறமையான, அழகான ஹீரோ கிடைத்துள்ளார். இவர் குறித்த பல்வேறு விமர்சனங்கள் வைத்த போதிலும் அவற்றையெல்லாம் கடந்து, தற்போது ரசிகர்களின் விருப்பத்திற்குரிய ஹீரோவாக மாறியுள்ளார்.

சூர்யாவின் சூரரைப் போற்று, ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன், விக்ரம் என அடுத்தடுத்த படங்கள் வெளியாகி அவருக்கு சிறப்பாக அமைந்தது. தொடர்ந்து பாலா இயக்கத்தில் 18 ஆண்டுகளுக்கு பிறகு அவர் கமிட்டான வணங்கான் படமும் சிறப்பாகவே அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சூட்டிங்கின்போது சூர்யா மற்றும் பாலா இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இந்தப் படம் நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது. தற்போது இந்தப் படத்தில் அருண் விஜய் நடித்து வருகிறார்.

இதனிடையே தற்போது சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் கங்குவா படத்தில் நடித்துவருகிறார் சூர்யா. திஷா பட்டானி இந்தப் படத்தில் சூர்யாவின் ஜோடியாகியுள்ளார். கோவா, கொடைக்கானலின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் இந்தப் படத்தின் சூட்டிங் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காட்டுப்பகுதிகளில் படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளின் சூட்டிங் நடைபெற்றுவருவதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங் செப்டம்பர் மாதத்தில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமர்ஷியல் இயக்குநராகவே அறியப்பட்ட சிவா, இந்தப் படத்தில் வரலாற்றுப் பின்னணியிலான கதைக்களத்தை கையில் எடுத்துள்ளார். முன்னதாக படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் வரும் 23ம் தேதி சூர்யாவின் பிறந்தநாளையொட்டி ட்விட்டரில் அவரது காமன் டிபியை வெளியிட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். வெளியான சில மணிநேரங்களிலேயே இந்த டிபி அதிகமான வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் சூர்யாவின் பிறந்தநாளையொட்டி கங்குவா படத்தின் அப்டேட்களும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய், ரஜினிகாந்த் போன்ற நடிகர்களின் பிறந்தநாளை எப்போதுமே ரசிகர்கள் அதிகமான அளவில் கொண்டாடுவார்கள். அந்த வரிசையில் தற்போது சூர்யாவும் இணைந்துள்ளார். அவரது பிறந்தநாளுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தற்போது கொண்டாட்ட மூடிற்கு ரசிகர்கள் வந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X