பயில்வான் ரங்கநாதனால் நிற்கக்கூட முடியாது - கிழித்து தொங்கவிட்ட நடிகர் டெலிபோன் ராஜ்
சென்னை: Bayilvan Ranganathan (பயில்வான் ரங்கநாதன்) பயில்வான் ரங்கநாதனால் நிற்கக்கூட முடியாது. அவர் தனது குடும்பத்தை கவனித்துக்கொள்வதற்காக கண்டதை பேசிவருகிறார் என நடிகர் டெலிபோன் ராஜ் தெரிவித்திருக்கிறார்.
சினிமா பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் சில படங்களில் நடித்திருக்கிறார். படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பத்திரிகையாளராக கலந்துகொள்ளும் பயில்வான் நடிகர், நடிகைகள், கலைஞர்கள் என ஒருவரை விடாமல் ஏடாகூடமாக கேள்வியை கேட்பவர். இதனால் அவர் என்ன கேள்வி கேட்பாரோ என பலர் முன் யோசனையோடு வருவதுண்டு,

பாலாவிடம் சிக்கிய பயில்வான்: அப்படி ஒருமுறை பிசாசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பயில்வான் ரங்கநாதன், நீங்கள் பிசாசு என்பதால்தான் கருப்பு உடையில் வந்திருக்கிறீர்களா என பாலாவிடம் வாயை விட, அதற்கு பாலாவோ பிசாசு என்றால் கருப்பு சட்டை போட வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. பிங்க் கலர் சட்டைக்கூட போட்டிருக்கலாம் என தனக்கேயுரிய பாணியில் பதிலடி கொடுத்தார். அந்த விழாவின்போது பயில்வான் ரங்கநாதன் பிங்க் கலர் சட்டை போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது..
பயில்வானின் அராஜகம்: அதேபோல் அச்சம் என்பது மடமையடா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பாடலாசிரியர் தாமரையிடம் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். இதனையடுத்து யூட்யூப்பில் நடிகர், நடிகைகள் குறித்து அவதூறாக பேசிக்கொண்டிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.
ரேகா நாயர் பதிலடி: இந்தச் சூழலில் பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்தில் ரேகா நாயர் நிர்வாணமாக நடித்ததைத் தொடர்ந்து அதுகுறித்து அருவெறுக்கத்தக்க வகையில் பேசினார். அதனையடுத்து திருவான்மியூரில் அவர் நடைபயிற்சி செய்துகொண்டிருந்தபோது பயில்வானிடம் சண்டைக்கு சென்றார் ரேகா நாயர். மேலும், அவரை அடிக்கவும் முயன்றார். அதேபோல் நடிகை ராதிகா ஒருமுறை பயில்வான் ரங்கநாதனை செருப்பால் அடித்த சம்பவமும் அரங்கேறியது.

பஞ்சரான பயில்வான்: சூழல் இப்படி இருக்க பட விழா ஒன்றில் சமீபத்தில் கலந்துகொண்ட கே.ராஜனிடம் வில்லங்கமான கேள்வியை பயில்வான் ரங்கநாதன் கேட்க, கோபமான ராஜன் மேடையில் வைத்தே கடுமையாக திட்டினார். இவ்வளவு பட்ட பிறகும் தனது அவதூறு பேச்சை பயில்வான் ரங்கநாதன் நிறுத்துவதாக இல்லை. தொடர்ந்து அவ்வாறு வீடியோக்களில் பேசிவருகிறார்.
டெலிபோன் ராஜ் பேட்டி: இந்நிலையில் வடிவேலுவுடன் பல காமெடி காட்சிகளில் நடித்து புகழ்பெற்ற நடிகர் டெலிபோன் ராஜ் பயில்வான் ரங்கநாதனை காட்டமாக விமர்சித்திருக்கிறார். அவர் அளித்த பேட்டி ஒன்றில், "பயில்வான் ரங்கநாதனால் நிற்கக்கூட முடியாது. கண்களில் இருந்து நீராக வழியும். ஒரு வசனம் கொடுத்தால் அதை அவரால் சொல்ல முடியாது. ஞாபக மறதியும் அவருக்கு இருக்கிறது. எனவே தனது குடும்பத்தை பார்க்க வேண்டும் அல்லவா. இதற்காகத்தான் யூட்யூபில் பேசிவருகிறார்.
500,1000 ரூபாய்: யூட்யூபில் பேசுவதற்கு 500,1000 அல்லது அதிகபட்சமாக 2000 ரூபாய் கொடுப்பார்கள். அதை கொண்டு போய் அவர் தனது வீட்டில் கொடுத்து குடும்பத்தை கவனித்துவருகிறார். யாரோ ஒரு நடிகர் யாரையோ பண்ணை வீட்டுக்கு அழைத்து செல்கிறார் என அவர் கூறுகிறார். அந்த பெண்ணை அழைத்து செல்ல அந்த நடிகரால் முடிகிறது. இவரால் முடியவில்லை. இதில் இவருக்கு என்ன வந்தது" என்றார். இந்தப் பேட்டியை ரசிகர்கள் பலரும் பகிர்ந்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











