புஸ்ஸி ஆனந்தை அந்த கிழி கிழித்துவிட்டு.. மீண்டும் தவெகவில் இணைய ஆர்வம் காட்டும் பிரபல நடிகர்!
சென்னை: நடிகர் விஜய் கடந்த 2024ஆம் ஆண்டு தனது ரசிகர் மன்றத்தை கட்சியாக மாற்றி அறிவித்த சில வாரங்களுக்கு உள்ளாகவே விஜய்யை சந்தித்து தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டவர் நடிகர் தாடி பாலாஜி. அதன் பின்னர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற்ற போது மாநாட்டில் கலந்து கொண்டார். அதன் பின்னர் சில மனக்கசப்புகள் ஏற்பட்டதால், ஒதுங்கி இருந்தார். இப்படி இருக்கும்போது, விஜய் தனக்கு தமிழக வெற்றிக் கழகத்தில் கட்டாயம் இடம் கொடுப்பார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் தாடி பாலாஜி.
நடிகர் விஜய்யின் ஆரம்பகால படங்களில் அவருக்கு நண்பனாக நடித்தவர்களில் தாடி பாலாஜியும் ஒருவர். இது மட்டும் இல்லாமல் விஜய்யின் நண்பர்களில் ஒருவர். இப்படி இருக்கும்போது, நடிகர் விஜய் ஆரம்பித்ததும் தன்னை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டு, பணியாற்றி வந்தார். ஊடகங்களைச் சந்திக்கும் போது கூட, விஜய் குறித்து பெருமிதமாக கூறி வந்தார். பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார். தனது மார்பில் விஜய்யின் முகத்தை பச்சை குத்தி தனது அன்பை வெளிப்படுத்தினார்.

தாடி பாலாஜி: இவ்வளவு ஈடுப்பாட்டுடன் இருந்த தாடி பாலாஜிக்கு கட்சியில் எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை. இது மட்டும் இல்லாமல் கட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து ஓரம் கட்டப்பட்டார். ஆதவ் அர்ஜுனா கட்சியில் இணைந்த போது தானே ஒரு மீம் ஒன்றைப் பகிர்ந்திருந்தார். இப்படி இருக்கும்போது புஸ்ஸி ஆனந்த் குறித்து பாலாஜி தெரிவித்த கருத்துக்கள் பலரது கவனத்தை ஈர்த்தது. அதாவது, புஸ்ஸி ஆனந்த் பல ஆண்டுகளாக விஜய் உடன் இருக்கிறார். அதற்காக தன்னைக் கடந்து தான் விஜய்யை சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுகிறார். கட்சியின் தொண்டன் தலைவரைச் சந்தித்து பேசினால் தான் கட்சியின் நிலை என்ன, மக்களின் தேவை என்ன என்பது புரிந்து கொள்ள முடியும். ஆனால் அதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி தர மறுக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
அதிருப்தி: கரூர் துயரச் சம்பவம் நடைபெற்ற போது கூட, விஜய் படப்பிடிப்புக்கு வந்தாலே சரியான நேரத்திற்கு வந்து செல்லக்கூடியவர். அப்படி இருக்கும்போது, அவருக்கு புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போன்றவர்கள் சரியான தகவல்களை கொடுத்திருந்தால், சரியான நேரத்திற்கு வந்திருப்பார் என்று தெரிவித்திருந்தார். இப்படி புஸ்ஸி ஆனந்த் மீது தொடர்ந்து அதிருப்தி கருத்துக்களைச் சொல்லி வந்த தாடி பாலாஜி, தற்போது தவெகவில் இணைவது குறித்து பேசியுள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
நம்பிக்கை: அதாவது, " தவெகவில் நான் இணைவது குறித்து கடவுளுக்கு தான் தெரியும். தலைவர் விஜய் எனக்கான வாய்ப்பை கண்டிப்பாக ஒருநாள் தருவார்" என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். இவரது இந்த கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











