விஜய் கட்சியில் தாடி பாலாஜிக்கு பொறுப்பா? தவெக கொடியுடன் கோயிலில் பூஜை!
சென்னை: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, இந்த மாதம் 27ந் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கான பந்தக்கால் நடும் விழா மற்றும் பூமி பூஜை நேற்று தொடங்கியது. இதில், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டார். மேலும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், நடிகரும், விஜய்யின் நண்பருமான தாடி, தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியுடன் கோவிலுக்கு வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இன்று புரட்டாசி சனிக்கிழமை என்பதால், கிழக்கு மாவட்டம் தமிழக வெற்றிக்கழகத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் விஜய்க்காக சிறப்பு பூஜை செய்தோம். நேற்று மாநாடுக்கு பூமி பூஜை போடப்பட்ட நிலையில், இன்று விஜய்க்காகவும் கொடிக்காகவும் பூஜை போட்டு இருக்கிறோம். அவரின் நண்பன் என்கிற முறையில் இதில் நான் கலந்து கொண்டதை நினைத்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

மகிழ்ச்சியான செய்தி: மூன்று நாளைக்கு முன் ஒரு குட் நியூஸ் சொல்வதாக சொல்லி இருந்தேன் அதை நான் இப்போது சொல்லுகிறேன். கடந்த வாரம் புஸ்ஸி ஆனந்திடம் இருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது, என்னை அலுவலகத்திற்கு அழைத்து இருந்தார். அவரின் அழைப்பை ஏற்று நான் அலுவலகம் சென்று இருந்தேன். அப்போது அங்கு என ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, நடிகரும் என் நண்பருமான விஜய் என்னை மாநாட்டுக்கு வேலை செய்யுமாறு சொன்னதாக புஸ்ஸி ஆனந்த் என்னிடம் கூறினார். இதைக்கேட்டு நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். அவர் கொடுத்த பணியை நான் சிறப்பாக செய்வேன் என்றார்.
இதுவே வெற்றிதான்: தொடர்ந்து பேசிய அவர், ஒருவர் அரசியலுக்கு வருகிறார் என்றால் அவரை வரவேற்க வேண்டும், என்ன பேசப்போகிறார், என்ன செய்யப்போகிறார் என்பது யாருக்கும் தெரியாத போது அவர்களாகவே ஏதேதோ பேசிக்கொள்கிறார்கள். இதுவே எங்களுக்கு வெற்றிதான். அனைவரும் தலைவர் விஜய்யைப்பற்றி பேசுகிறார்கள். ஆனால்,அவர் அமைதியா சென்று கொண்டு இருக்கிறார். இவை அனைத்திற்கும் பதில் 2026ல் தெரியும் என தாடி பாலாஜி அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











