நம்ம தளபதியா இது? கிருஷ்ணர் வேடத்தில் எவ்வளவு அழகா இருக்காரு பாத்திங்களா?
சென்னை: கிருஷ்ணரின் அவதார தினமான கிருஷ்ண ஜெயந்தி இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் பலர் தங்கள் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் ராதா வேடமிட்டு அழகு பார்ப்பார்கள். அந்த வகையில் தளபதி விஜய், கிருஷ்ணர் வேடமிட்ட போட்டோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
விஷ்ணு பகவானின் அவதாரமான கிருஷ்ணரின் பிறந்தநாளை கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி, ஜென்மாஷ்டமி என வெவ்வேறு பெயர்களில் கொண்டாடுகிறோம். இந்த நாளில், வீட்டில் விதவிதமான பலகாரங்கள் செய்து, கிருஷ்ணரின் பாதத்தை கோலமிட்டு வழிபாடு நடத்துவர்கள் அது போல, தங்கள் வீட்டு குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதா போல அலங்காரம் செய்து, பாட்டுப்பாடி, கோலாட்டம் ஆடி கிருஷ்ணரை மகிழ்விப்பார்கள்.

க்யூட் கிருஷ்ணர்: இதனால், குழந்தைகள் இருக்கும் வீட்டில் இன்று சிறப்பாக இந்த பண்டிகை கொண்டாடப்படும். திரை பிரபலங்களும் தங்களது குழந்தைகளுக்கு கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு அழகு பார்ப்பார்கள். அந்த வகையில் தளபதி விஜய் கிருஷ்ணர் வேடமிட்ட கருப்பு வெள்ளை புகைப்படம் ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அந்த போட்டோவில், கையில் புல்லாங்குழலும், நெற்றியில் கிருஷ்ணருக்கு இடும் திலகம், தலைப்பாகையுடன் குட்டி கிருஷ்ணராக அழகாக க்யூட்டாக இருக்கிறார் விஜய். இணையத்தில் டிரெண்டான இந்த போட்டோவை ரசிகர்கள் இணையத்தில் ஷேர் செய்து டிரெண்டாக்கி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கட்சிக்கொடி: தற்போது தீவிர அரசியலில் குதித்து இருக்கும் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியைத் தொடங்கி உள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் களமிறங்க உள்ள நிலையில், கடந்த வாரம் தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி மற்றும் பாடலை வெளியிட்டு பேசினார். அந்த கொடியில் சிவப்பு, மஞ்சள் நிறம் நடுவில் வாகைப்பூ அதனைச்சுற்றி 28 நட்சத்திரங்கள், இரண்டு யானைகள் இடம் பெற்று இருந்தன. இந்த கொடிக்கான அர்த்தத்தை முதல் மாநில மாநாட்டில் கூறுவதாக விஜய் தெரிவித்துள்ளார்.
கோட்: தற்போது விஜய், வெங்கட்பிரபு இயக்கி உள்ள கோட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அப்பா, மகன் என இரண்டு வேடத்தில் விஜய் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், சினேகா, மீனாட்சி சௌத்ரி என பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் இசை அமைத்து இருக்கும் நிலையில், இப்படத்திற்காக விஜய் இரண்டு பாடல்களை பாடி உள்ளார். இப்படம் செப்டம்பர் 5ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











