என் வாழ்க்கையே முடிஞ்சிருக்கும்.. நயன்தாரா பண்ண விஷயம்.. வெளிப்படையாக பேசிய தம்பி ராமையா!
சென்னை: நடிகர் தம்பி ராமையா அடுத்தடுத்த படங்களில் காமெடியனாகவும் கேரக்டர் ரோல்களிலும் நடித்து வருகிறார். நடிகர் அர்ஜுனுக்கு சம்பந்தி ஆகியுள்ளார் தம்பி ராமையா. சமீபத்தில் இவரது மகன் உமாபதிக்கும் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவிற்கும் சென்னையில் மிகவும் பிரம்மாண்டமான அளவில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில் அடுத்ததாக ராஜா கிளி படத்தின் திரைக்கதையை எழுதி இசையமைக்கவும் செய்துள்ளார். இந்தப் படத்தை அவரது மகன் உமாபதி இயக்கியுள்ள நிலையில் படம் அடுத்த மாதம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டரில் தம்பி ராமையா நடித்துள்ளார்.

நடிகர் தம்பி ராமையா: நடிகர் தம்பி ராமையா அடுத்தடுத்த படங்களில் காமெடியனாகவும் கேரக்டர் ரோல்களிலும் நடித்துள்ளார். பல படங்களுக்கு இவர் ஸ்கிரிப்ட்டும் எழுதியுள்ளார். இந்நிலையில் அடுத்ததாக தம்பி ராமையா எழுதி இசையமைத்துள்ள ராஜா கிளி படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்தப் படத்தை அவரது மகன் உமாபதி இயக்கியுள்ள நிலையில் சுரேஷ் காமாட்சி படத்தை தயாரித்துள்ளார். அடுதத மாதம் படம் ரிலீசாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் இசை வெளியீடு கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த நிலையில், அதில் நடிகர் அர்ஜுன் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.
ஸ்கிரிப்ட் ரைட்டர்: தன்னுடைய அம்மா மீது மிகுந்த பாசம் கொண்டவர் தம்பி ராமையா. ஒரு கட்டத்தில் தன்னுடைய அம்மா இறந்தபோது தனக்கு தற்கொலை எண்ணம் வந்ததாக தம்பி ராமையா தற்போது பேட்டியொன்றில் பேசியுள்ளார். தம்பி ராமையாவின் அப்பா கவிதைகள் அதிகமாக எழுதிய நிலையில், தானும் ஓரளவிற்கு கவிதைகள் எழுதி தன்னுடைய அம்மாவிடம் அதை கொடுத்து பாராட்டு வாங்குவேன் என்றும் அதன் தாக்கத்திலேயே படங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதியதாகவும் கூறியுள்ளார். தன்னுடைய அம்மா இல்லையென்றால் தானும் இல்லை என்ற அளவில் தான் இருந்ததாகவும் தம்பி ராமையா தெரிவித்துள்ளார்.
தலைதூக்கிய தற்கொலை எண்ணம்: ஒரு கட்டத்தில் தன்னுடைய அம்மா மறைந்தபோது, தான் மிகப்பெரிய மனஉளைச்சலுக்கு ஆளானதாகவும் அவர் கூறியுள்ளார். அந்த நேரத்தில் தன்னுடைய மகளுக்கு மட்டுமே திருமணம் நடந்திருந்ததாகவும் மகன் உமாபதிக்கு திருமணம் நடக்காத நிலையில், தான் தற்கொலை செய்துக் கொள்ள நினைத்ததாகவும் தம்பி ராமையா கூறியுள்ளார். ஆனால் அடுத்தடுத்து 4 படங்களில் நடித்துவந்த நிலையில், தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்றும் தான் யோசித்ததாகவும் தெரிவித்துள்ளார். முன்னதாக இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தில் இதுகுறித்து தான் எழுதியிருந்த நிலையில் தனக்கு ஒரு கஷ்டம் வந்தபோது தற்கொலை குறித்து யோசித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யதார்த்தத்தை புரிய வைத்த நயன்தாரா: அந்த நேரத்தில்தான் தன்னுடைய அம்மாவின் மறைவு குறித்து கேள்விப்பட்டு நடிகை நயன்தாரா தன்னிடம் பேசியதாக தம்பி ராமையா தெரிவித்துள்ளார். அப்போது நயன்தாராவுடன் டோரா படத்தில் இணைந்து தான் நடித்துக் கொண்டிருந்த நிலையில் தனக்கு போன் செய்த அவர், யதார்த்தத்தை புரிய வைத்ததாகவும் இதையடுத்து தன்னுடைய தற்கொலை எண்ணம் போனதாகவும் தம்பி ராமையா தெரிவித்துள்ளார். சரியான நேரத்தில் நயன்தாரா தனக்கு போன் செய்து பேசியிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும் என்று யோசிக்கக்கூட முடியவில்லை என்றும் தம்பி ராமையா கூறியுள்ளார்.
பிரச்சினைகளுக்கு தீர்வு: சமீபத்தில் தன்னுடைய மகனின் திருமணம் நடந்த நிலையில், அன்றைக்கு தான் மோசமான முடிவை எடுத்திருந்தால் மகனின் திருமணத்தை பார்க்க முடியாமல் போயிருக்கும் என்றும் தம்பி ராமையா உருக்கம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இந்த உலகத்தில் தீர்க்க முடியாத பிரச்சினைகள் என்று ஒன்று இல்லை என்றும் நமக்கு பிரச்சினைகள் வரும்போது நம்மை விட கீழே இருக்கும் நபர்களை நினைத்துக் கொண்டால் நம்முடைய பிரச்சினைகள் பெரிதாக தெரியாது என்றும் தம்பி ராமையா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











