Thambi ramaiah: வொய்ஃப் கிட்ட அதை கேட்டால் அயோக்கியத்தனம்.. தம்பி ராமையா பளீச்!

சென்னை: நடிகர், இயக்குநர், ஸ்கிரிப்ட் ரைட்டர் என அடுத்தடுத்த தளங்களில் பல ஆண்டுகளாக பயணித்துவரும் தம்பி ராமையா, நடிகராகவே அதிகமாக கவனத்தை செலுத்தி வருகிறார். இவரது மகன் உமாபதியும் நடிகராக சில படங்களில் நடித்துள்ள நிலையில் சமீபத்தில் இவருக்கும் நடிகர் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யாவிற்கும் சென்னையில் பிரம்மாண்டமாக திருமணம் நடந்தது.

அடுத்ததாக உமாபதி ராஜாக்கிளி என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளார் நடிகர் தம்பி ராமையா. இந்தப் படத்தின் இசை வெளியீட்டில் நடிகர் அர்ஜுனும் கலந்துக் கொண்டு, தன்னுடைய மருமகன் மற்றும் சம்பந்தியை பாராட்டி பேசியிருந்தார்.

television thambi ramaiah

நடிகர் தம்பி ராமையா: நடிகர் தம்பி ராமையா அடுத்தடுத்து இயக்குநர், நடிகர், ஸ்கிரிப்ட் ரைட்டர் என பல்வேறு தளங்களில் பல ஆண்டுகளாக பயணித்து வருகிறார். நடிப்பிலும் பன்முகம் காட்டிவரும் இவர் காமெடியன், கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் மற்றும் வில்லனாகவும் நடித்து வருகிறார். ஆயினும் இவருக்கு அடுத்தடுத்து காமெடி கேரக்டர்களே சிறப்பாக அமைந்து வருகிறது. இவரது மகன் உமாபதி சில படங்களில் நடித்துள்ள நிலையில் சமீபத்தில் இவருக்கும் நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யாவிற்கு சென்னையில் பிரம்மாண்டமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதன் கொண்டாட்ட வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

ராஜாக்கிளி படம்: இதனிடையே அடுத்ததாக ராஜாக்கிளி என்ற படத்தை இயக்கியுள்ளார் உமாபதி. இந்தப் படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளார் தம்பி ராமையா. முன்னதாக இந்தப் படத்தை அவரே இயக்க திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார். உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பிரபல தொழிலதிபரின் வாழ்க்கையை இந்தப்படத்தில் கதைக்களமாக கொண்டுள்ளதாகவும் தம்பி ராமையா கூறியுள்ளார். இந்தப் படத்தில் அவரே லீட் கேரக்டரில் நடித்துள்ளார். இயக்குநராகவும் உள்ள தம்பி ராமையா அடுத்ததாக சமுத்திரக்கனியை வைத்து படமியக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மீண்டும் இயக்குநர்: சமுத்திரக்கனியுடனான நட்பு குறித்து பாராட்டி பேசியுள்ள தம்பி ராமையா, அவரை லீட் கேரக்டரில் வைத்து தங்க நட்சத்திரமும் தமிழ் குற்றாலமும் என்ற படத்தை இயக்கவுள்ளதாகவும் அரசியல் நகைச்சுவை படமாக இந்தப் படம் உருவாகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அடுத்தடுத்து நிகழ்ச்சிகளில் பேசிவரும் தம்பி ராமையா, ராஜாக்கிளி படத்தின் பிரமோஷன்களுக்காகவும் அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வருகிறார். அந்த வகையில் இந்த வார தமிழா தமிழா நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றிருந்தார். அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்துக் கொண்ட தம்பதிகள் குறித்து இந்த நிகழ்ச்சியில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.

தமிழா தமிழா நிகழ்ச்சியில் தம்பி ராமையா: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில் பேசிய தம்பி ராமையா, அரேஞ்ச்ட் மேரேஜ் என்றால் குறைந்தபட்சம் 5 வயது வித்தியாசம் அவர்களுக்குள் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். பெண்கள் ஆணைவிட 5 வயது முன்னதாகவே பக்குவமும் அறிவும் கொண்டவர்களாக மாறிவிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனக்கும் தன்னுடைய மனைவிக்கும் அரேஞ்ச்ட் மேரேஜ்தான் என்றும் தங்களுக்குள் 7 வயது வித்தியாசம் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் லவ் மேரேஜ்க்கு சம வயது இருக்கலாம் என்றும் அங்கே ஈகோ உடைந்து விடுவதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார்.

மனைவியிடம் கேட்டால் அயோக்கியத்தனம்: இந்த வயது வித்தியாசத்தால் தனக்கும் தன்னுடைய மனைவிக்கும் இடையில் எந்தவிதமான வித்தியாசமும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். தன்னைபுரிந்துக் கொள்ளும் சந்தர்ப்பத்தை தான் ஏற்படுத்தியதாகவும் அதேபோல தன்னுடைய மனைவியை தான் புரிந்துக் கொண்டதால் தங்களுக்குள் பிரிவினை ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளார். தன்னுடைய மனைவியிடம் தான் அனைத்தையும் ஒப்படைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். மனைவியிடம் 500 ரூபாய் கொடுத்துவிட்டு கணக்கு கேட்பது அயோக்கியத்தனம் என்றும் அவர் கூறியுள்ளார். மனைவியிடம் நம்பிக்கை இருந்தால் வயது ஒரு தடையாக இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X