சமுத்திரக்கனியை வைத்து வீட்டினரை மிரட்டும் தம்பி ராமையா.. அட இப்படி ஒரு கதை ஓடிக்கிட்டு இருக்கா?

சென்னை: நடிகர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர் என அடுத்தடுத்த தளங்களில் பயணித்து வருபவர் தம்பி ராமையா. சமீபத்தில் இவரது மகன் உமாபதி மற்றும் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா இருவருக்கும் சென்னையில் பிரம்மாண்டமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதனிடையே உமாபதி ராஜாக்கிளி என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தின் கதை வசனம் ஆகியவற்றை எழுதியுள்ளார் தம்பி ராமையா. இந்தப்படத்தை முன்னதாக அவரே இயக்க திட்டமிட்டிருந்த நிலையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிதான் உமாபதியிடம் இந்தப் படத்தை கொடுக்கலாம் என தனக்கு அறிவுறுத்தியதாக அவர் தெரிவித்திருந்தார்.

thambi ramaiah rajakili movie samuthirakani

நடிகர் தம்பி ராமையா: நடிகர் தம்பி ராமையா நடிகராக பல்வேறு பரிணாமங்களில் செயல்பட்டு வருகிறார். காமெடியன், கேரக்டர் ரோல்கள் மற்றும் வில்லத்தனமான நடிப்பை அடுத்தடுத்து கோலிவுட்டில் இவர் கொடுத்துவரும் நிலையில், திரைக்கதை ஆசிரியராகவும் இவர் பல ஆண்டுகளாக பல படங்களில் செயல்பட்டு வருகிறார். அடுத்ததாக தன்னுடைய மகன் உமாபதி இயக்கதில் உருவாகியுள்ள ராஜாக்கிளி படத்தின் கதை திரைக்கதையையும் தம்பி ராமையா உருவாக்கியுள்ளார். இந்தப் படத்தை அவரே இயக்கவிருந்த நிலையில், உமாபதியை படத்தின் இயக்குநராக்கலாம் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிதான் திசை மாற்றியுள்ளார்.

ராஜாக்கிளி படம்: ராஜாக்கிளி படத்தை உண்மை சம்பவங்களை மையமாக வைத்து தான் எழுதியுள்ளதாக தம்பி ராமையா பேட்டியொனறில் பகிர்ந்துள்ளார். தமிழ் நாட்டில் ராஜாக்கிளியாக செயல்பட்ட தொழிலதிபர் ஒருவரை சமுதாயம் எப்படி அவரது இறக்கைகளை பிய்த்தெரிந்து நடைபிணமாக்கியது என்பதை இந்தப் படத்தில் கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது வரும் இயக்குநர்கள் இளைஞர்களை மட்டுமே கதை நாயகர்களாக கொண்டு படங்களை இயக்கிவருவதாகவும் ஆனால் 50 வயது நபர்களிடம் அதிகமாக அனுபவங்கள் கொட்டிக் கிடப்பதாகவும் ப பாண்டி உள்ளிட்ட சில படங்களே இவற்றை முன்னிருத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.

சமுத்திரக்கனி உடனான நட்பு: இதனிடையே இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனியுடனான தன்னுடைய நீண்ட கால நட்பு குறித்தும் அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ளார். தன்னுடன் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எப்போதும் சமுத்திரக்கனி உடனிருப்பார் என்றும் தங்களின் நட்பு குறித்து அவர் உருக்கம் தெரிவித்துள்ளார். தன்னுடைய ரத்த சொந்தங்கள் தன்னைவிட்டு சென்றாலும் தன்னை சந்தோஷமாக பார்த்துக் கொள்ள தம்பி சமுத்திரக்கனி இருப்பதாகவும் தம்பி ராமையா கூறியுள்ளார். அதை வைத்து தான் தன்னுடைய குடும்பத்தினரை மிரட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

குடும்பத்தினரை மிரட்டும் தம்பி ராமையா: 7 மணிக்கு வர வேண்டிய காபி 7.10 மணிக்கு வந்தாலும் தன்னுடைய தம்பி சமுத்திரக்கனி வீட்டிற்கு சென்றுவிடுவேன் என தன்னுடைய குடும்பத்தினரை மிரட்டி வருவதாகவும் தம்பி ராமையா தெரிவித்துள்ளார். அந்த அளவில் சமுத்திரக்கனி மீதான நம்பிக்கை மற்றும் நட்பை அவர் வெளிப்படுத்தியுள்ளார். தன்னுடைய சம்பந்தி அர்ஜுன் குறித்தும் உருக்கம் தெரிவித்த தம்பி ராமையா, தன்னுடைய அப்பா -அம்மா ஸ்தானத்தில் அவரை பார்த்து வருவதாகவும், தற்போதும் அவரை சார் என்று மரியாதையுடன் பேசி வருவதாகவும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X