லால் சலாம் படம் எடுக்க தைரியம் வேண்டும்.. ஐஸ்வர்யாவை பாராட்டிய தம்பிராமையா!

சென்னை: ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருக்கும் படம் லால் சலாம். லைகா நிறுவனம் தயாரித்து இருக்கும் இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர். சூப்பர்ஸ்டார் ரஜினியும் மொய்தீன் பாய் என்ற சிறப்பு தோற்றத்தில் நடித்து இருக்கிறார். இத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பேசிய தம்பி ராமையா, ஐஸ்வர்யா ஆண் இயக்குநர்களுக்கு நிகரான தைரியமான ஒரு படத்தை எடுத்து இருக்கிறார் என்றார்.

கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இத்திரைப்படம், 2024 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்ப்டடது. ஆனால், சில காரணங்களால், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தற்போது படம், பிப்ரவரி 9 ஆம் தேதிக்கு ரிலீஸ் ஆக உள்ளது.

Actor Thambi Ramaiah speech at Lal salaam audio launch

இந்நிலையில் நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.இதில் பேசிய ரஜினியின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா ரஜினி என் அப்பாவை சங்கி என விமர்சிக்கிறார்கள். அதைக் கேட்கும் போது எனக்கு வருத்தமாக இருக்கிறது. அவர் ஒரு சங்கியாக இருந்திருந்தால் லால் சலாம் படத்தில் நடித்திருக்க மாட்டார். ஒரு சங்கியால் இந்த படம் பண்ண முடியாது. இந்த படத்தில் அவரை தவிர தைரியமாக யாருமே நடித்திருக்க முடியாது என்றார்.

தம்பி ராமையா பேச்சு: இதையடுத்து இசை வெளியீட்டு விழாவில் பேசிய தம்பி ராமையா, ராமர் கோயில் பிரதிஷ்டை நடக்கும்போது ஒரு இஸ்லாமியப் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ராம் ரகீம் எனப் பெயர் சூட்டியிருக்கிறார். அந்தத் தாயின் குணம்தான் இந்த லால் சலாம் படத்தின் கதை என்றார்.

ஆண்களுக்கு நிகராக: மேலும், பேசிய அவர், இயக்குநர் சுதா கொங்கராவுக்குப் பிறகு பெண் இயக்குநர்கள் ஃபீல் குட் படங்கள்தான் எடுப்பார்கள் என்பதை உடைத்து ஆண்களுக்கு நிகராக ஒரு படத்தை எடுத்திருக்கிறார் என்றார் ஐஸ்வர்யா. சிவாஜி ராவாக வந்தவர் ரஜினிகாந்தாக மாறி கருப்பு என்பதை திராவிட இனத்தின் நிறம் என்பதை நிரூபித்தார். இளைய தளபதி விஜயக்கும் ரஜினி ஊக்கமளித்திருக்கிறார். முதல்வர் நாற்காலி அவரை 1996 ஆம் ஆண்டு வந்தமர அழைத்தது. ஆனால் அதை தனது ஞானத்தால் மறுத்தார். சினிமா உயிர்போடு இருப்பதற்கு ரஜினிகாந்த் தேவை என்று பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X