எலும்பும் தோலுமாய் அடையாளமே தெரியாமல் மாறிப்போன 'கருப்பன் குசும்புக்காரன்' நடிகர்.. பகீர் போட்டோ!
சென்னை: நடிகர் தவசி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு எலும்பும் தோலுமாய் இருக்கும் போட்டோ இணையத்தில் கசிந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Recommended Video
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரிக்கு அப்பாவாக நடித்தவர் நடிகர் தவசி. இந்தப் படத்தில் குறி சொல்பவராக அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
அவர் பேசிய கருப்பன் குசும்புக்காரன் என்ற டயலாக் பெரும் வரவேற்பை பெற்றது. இன்றும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு பேருதவியாக இருந்து வருகிறது.

சப்போர்ட்டிங் ரோல்
விஜய் சேதுபதியின் கருப்பன் உட்பட பல முன்னணி நடிகர்களிள் படங்களில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்துள்ளார். முன்னணி தொலைக்காட்சி சீரியலிலும் நடித்துள்ளார் தவசி.

தவசியின் பகீர் போட்டோ
இந்நிலையில் நடிகர் தவசியின் பகீர் போட்டோ ஒன்று இணையத்தை அதிரவிட்டு வருகிறது. நடிகர் தவசியின் அடையாளமே அவரது முறுக்கு மீசையும் தாடியும் சிரிப்பும் தான்.

எலும்பும் தோலுமாய்
ஆனால் தற்போது நடிகர் தவசி மொட்டை அடித்து, மீசை, தாடி என எதுவும் இல்லாமல் எடை குறைந்து எலும்பும் தோலுமாக உள்ளார். அவரது இந்த போட்டோ பெரும் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புற்றுநோயால்
நடிகர் தவசி கடந்த சில வருடங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் தற்போது அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது அவரது மகன் திரைத்துறையே சேர்ந்த பலரிடம் சிகிக்சைக்காக உதவி கேட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











