கவலைக்கிடமான நிலையில் நடிகர் தென்னவன்.. ஐசியூவில் தொடர் தீவிர சிகிச்சை!
சென்னை: உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் தென்னவனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
நடிகர் தென்னவன் இயக்குநர் பாரதிராஜாவின் என்னுயிர் தோழன் என்ற படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக அறிமுகமானார். விருமாண்டி, வாகை சூடவா, சண்டக்கோழி, சுந்தர பாண்டியன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
வில்லன் கேரக்டரிலும் குணச்சித்திர கேரக்டரிலும் நடித்து வருகிறார் தென்னவன்.அது மட்டுமின்றி சன்டிவியில் ஒளிபரப்பாகும் ராசாத்தி சீரியலிலும் நடித்து வருகிறார் தென்னவன்.

பயங்கர தலைவலி
52 வயதிலும் தொடர்ந்து பிஸியாக நடித்து வந்தார் தென்னவன். எந்த உடல்நிலை பாதிப்பும் இல்லாத தென்னவன், கடந்த வியாக்கிழமை திடீரென பயங்கர தலைவலியால் பாதிக்கப்பட்டார்.

மூளையில் கட்டி
இதனைத் தொடர்ந்து சென்னை பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் தென்னவன். உடனடியாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தென்னவனின் மூளையில் கட்டி ஒன்று இருப்பதை கண்டு பிடித்துள்ளனர்.

கவலைக்கிடம்
இந்நிலையில் தென்னவனின் உடல்நிலை மேலும் மோசமானதால் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

திரைத்துறையினர் சோகம்
தென்னவனை நல்லபடியாக காப்பாற்ற மருத்துவர்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். தென்னவன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள செய்தி திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











