உடல் நலமில்லாமல் தீவிர சிகிச்சைப் பெற்று வந்த... பிரபல வில்லன் நடிகர் திலகன் மகன் திடீர் மரணம்!

திருவனந்தபுரம்: பிரபல நடிகர் திலகன் மகன், ஷாஜி திலகன் உடல் நலக்குறைவால் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 56.

தமிழில் சுயேச்சை எம்.எல்.ஏ, பாலா, கள்ளழகர், அரவிந்தன், ஆயுதபூஜை, கிளிப்பேச்சு கேட்கவா உட்பட பல படங்களில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்தவர் மலையாள நடிகர் சத்ரியன்.

கே.சுபாஷ் இயக்கத்தில் விஜய்காந்த், பானுப்பிரியா நடித்த சத்ரியன் படத்தில் இவர் பேசிய வசனம் புகழ்பெற்றது.

கல்லீரல் பிரச்னை

கல்லீரல் பிரச்னை

நடிப்புக்காக பல விருதுகளை பெற்றுள்ள திலகன், தனது 77 வது வயதில், கடந்த 2012 ஆம் ஆண்டு உயிரிழந்தார். இவருக்கு 4 மகன்கள், 2 மகள்கள். இதில் மூத்த மகன் ஷாஜி திலகன். சினிமாவில் சாதிக்க நினைத்தார். ஆனால், அப்பாவை போல சினிமாவில் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. இதையடுத்து, டிவி தொடர்களில் நடித்து வந்தார். பெரும்பாலும் வில்லன் கேரக்டர்களிலேயே நடித்து வந்தார்.

கொச்சியில் சிகிச்சை

கொச்சியில் சிகிச்சை

அவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து வில்லன் வேடங்களில் நடித்து வந்த அவருக்கு, கடந்த சில நாட்களாக உடல் நலமில்லாமல் இருந்து வந்தது. அவருக்கு கல்லீரல் பிரச்னை என்று கூறப்படுகிறது. இதற்காக அவர் கொச்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தீவிரச் சிகிச்சைப் பெற்று வந்தார்.

இரங்கல்

இரங்கல்

இந்நிலையில், நோய் முற்றியதால், சிகிச்சை பலனளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து இன்று காலை அவர் உயிரிழந்தார். அவரது மறைவை அடுத்து மலையாளத் திரைத் துறையினரும் சின்னத்திரையை சேர்ந்தவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மறைந்த ஷாஜி திலகனுக்கு இந்திரா என்ற மனைவியும் அபிராமி என்ற மகளும் உள்ளனர்.

அப்போலோ டயர்ஸ்

அப்போலோ டயர்ஸ்

ஷாஜி திலகன், சாகரசரித்திரம் என்ற மலையாளப் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்தப் படம் 1998 ஆம் ஆண்டு வெளியானது. இது கவனிக்கப்படவில்லை என்பதால் சின்னத்திரைக்குச் சென்றார், ஷாஜி. அதற்கு முன் இவர், அப்போலோ டயர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஷாஜியின் சகோதரர்கள் ஷம்மி திலகன், ஷோலி திலகன் ஆகியோரும் மலையாள சினிமாவில் நடிகர்களாக உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X