விஜய் மட்டுமில்லை.. 2026 தேர்தலில் நிற்கும் இன்னொரு நடிகர்.. சீமான் கொடுத்த சர்ப்ரைஸ்.. டெபாசிட் வருமா?

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்கவிருக்கிறது. வருகின்ற தேர்தலை ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறது. எந்தக் கட்சி ஆட்சிக்கும் என்ற கேள்வி போன்றே; விஜய்யின் அரசியல் வருகை என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வியும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இந்நிலையில் விஜய்யை போன்றே இன்னொரு நடிகரும் வரும் தேர்தலில் களமிறங்கவிருக்கிறார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடப்பதற்கு இன்னும் சில மாதங்களே இருக்கிறது. அதனையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்ட ஆரம்பித்திருக்கின்றன. திமுகவுடன் காங்கிரஸ் (இப்போதுவரை திமுக கூட்டணியில்தான் இருக்கிறது), கம்யூனிஸ்ட், விசிக, தேமுதிக என பல கட்சிகள் கூட்டணி அமைத்திருக்கின்றன அதிமுக கூட்டணியில் பாஜக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

தனித்து விடப்பட்ட தவெக: இந்தத் தேர்தலில் விஜய்யை நோக்கித்தான் பலரது பார்வையும் இருக்கிறது. அவர் கட்சி ஆரம்பித்தபோது கண்டிப்பாக பல கட்சிகள் அவரது கட்சியுடன் கூட்டணி வைக்கும் என பேசப்பட்டது. ஆனால் இப்போதுவரை தவெகவுடன் எந்தக் கட்சியும் கூட்டணிக்கு வரவில்லை. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தேமுதிககூட அறிவாலயத்துக்கு சென்றுவிட்டதை பார்த்து கண்டிப்பாக தவெகவினர் ரத்த கண்ணீர்தான் வடித்திருப்பார்கள். இருந்தாலும் தாங்கள் கண்டிப்பாக இந்தத் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவோம் என்று உச்சபட்ச நம்பிக்கையோடு தவெகவினர் கூறிவருகிறார்கள். ஆனாலும் தாங்கள் தனித்து விடப்படுவோம் என்பதை அவர்கள் கனவிலும்கூட நினைத்து பார்த்திருக்கமாட்டார்கள்.

Actor Thirumurugan to Contest Tamil Nadu Assembly Elections as Seeman Announces Candidates List
Photo Credit:

தனித்து நிற்கும் நாம் தமிழர் கட்சி: அதேபோல் சீமானின் நாம் தமிழர் கட்சியும் தனியாக தேர்தலை சந்திக்கிறது. எப்போதுமே அந்தக் கட்சி தனித்துதான் நிற்கும். அதன் காரணமாகத்தான் கட்சி தொடங்கி இத்தனை வருடங்களில் ஒரு எம்.எல்.ஏவைக்கூட கோட்டைக்கு அனுப்ப முடியவில்லை என்று பலரும் சொல்கிறார்கள். ஆனால் சீமானோ தனித்து போட்டி என்பதில் உடும்பு பிடியாக இருக்கிறார். சூழல் இப்படி இருக்க நேற்று திருச்சியில் நடந்த கட்சி மாநாட்டில் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார் சீமான்.

தேர்தலில் களமிறங்கும் நடிகர்: அதன்படி தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டப்பேரவைத் தொகுதியில் நடிகர் திருமுருகனை வேட்பாளராக களமிறக்கியிருக்கிறார் சீமான். திருமுருகன் ஒரத்தநாடு அருகே இருக்கும் ஆம்பலாபட்டு என்ற ஊரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாக அவரை அங்கே போட்டியிட வைத்திருக்கிறார் என கருதப்படுகிறது. ஆனால் தஞ்சை மாவட்டத்தில் திமுக எப்போதுமே பலம் வாய்ந்ததாக இருக்கும். எனவே இத்தேர்தலில் திருமுருகன் டெபாசிட் வாங்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

திருமுருகனின் கரியர்: நடிகர் திருமுருகன் களவாணி படத்தில் வில்லனாக நடித்து திரைத்துறையில் நடிகராக அறிமுகமானவர். முதல் படத்திலேயே அவர் தனது நடிப்பால் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துவிட்டார். அதனையடுத்து அரவான், ஈட்டி, 49 ஓ, பென்சில், அட்டு, டார்ச் லைட், டீசல் உள்ளிட்ட படங்களில் நடித்தார். களவாணி படத்தில் நடித்ததற்காக சிறந்த வில்லன் நடிகருக்கான தமிழ்நாடு அரசு விருதை கடந்த 2010ஆம் ஆண்டு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X