Kamal Haasan - கமல் படத்தில் நடிக்கக்கூடாது.. காமெடி நடிகருக்கு ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்ட பாரதிராஜா

சென்னை: Kamal Haasan (கமல் ஹாசன்) கமல் ஹாசன் படத்தில் நடிக்கக்கூடாது என பாரதிராஜா தன்னிடம் கூறியதாக நடிகர் தியாகு தெரிவித்திருக்கிறார்.

கமல் ஹாசன் முன்னணி நடிகர்களில் ஒருவர். சிறு வயதிலிருந்தே நடித்துவரும் அவர் இதுவரை 230 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். இடையில் அரசியலுக்கு சென்ற அவர் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி தேர்தலில் களமிறங்கினார். ஆனால் எந்தத் தொகுதியிலும் அவரது கட்சியால் வெல்ல முடியவில்லை. இதனையடுத்து சோர்வடைந்த கமல் சினிமாவில் மீண்டும் கவனத்தை செலுத்த ஆரம்பித்திருக்கிறார்.

Actor Thyagu has said that Bharathiraja told him not to act in Kamal Haasans film

மாஸ் ரீ எண்ட்ரி: அந்தவகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தின் மூலம் மாஸாக ரீ எண்ட்ரி கொடுத்தார் கமல் ஹாசன். அடுத்ததாக இந்தியன் 2 படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தை முடித்துவிட்டு தெலுங்கில் புராஜெக்ட் கே, தமிழில் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படம், மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படம் என பிஸியான லைன் அப்பை வைத்திருக்கிறார்.

பெரும் மரியாதை: கமல் ஹாசனை பொறுத்தவரை அனைத்திலுமே ஏதேனும் புதிய முயற்சியை சோதித்து பார்ப்பவர். இதன் காரணமாகவே இந்திய சினிமாவில் அவர் மேல் பலரும் பெரும் மரியாதை வைத்திருக்கின்றனர். அதேபோல் சினிமாவில் ஏதேனும் ஒரு பிரச்னை என்றாலும் கமல் ஹாசன் முதல் ஆளாக நிற்பார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி ஒருமுறை திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கும், தொழிலாளர் சங்கத்துக்கும் ஒரு பிரச்னை ஏற்பட்டது. அந்த சமயத்தில் தொழிலாளர் சங்கத்தின் பக்கம் நின்றார் கமல் ஹாசன்.

ஆர்டர் போட்ட பாரதிராஜா: இந்நிலையில் காதலா காதலா படத்தின்போது ஏற்பட்ட ஒரு அனுபவத்தை நடிகர் தியாகு ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.அந்தப் பேட்டியில் பேசிய அவர், "காதலா காதலா படத்தில் டெல்லி கணேஷ் நடிக்க வேண்டிய வேடம் முதலில் எனக்குதான் வந்தது. கமலுடன் நடிக்க மிகவும் ஆவலாக இருந்தேன். படத்தின் தயாரிப்பாளர் தேனப்பன் எனக்கு அட்வான்ஸ் எல்லாம் கொடுத்துவிட்டார்.

அடுத்தநாள் ஏவிஎம் ஸ்டுடியோவில் படப்பிடிப்பு. ஆனால், இயக்குனர் செல்வமணியும், பாரதிராஜாவும் என்னை அழைத்து அந்த படத்தில் நடிக்க கூடாது என சொல்லிவிட்டனர். கமல் ஒரு மகா கலைஞன். எப்பேற்ப்பட்ட நடிகர். இதை அவரிடம் நேரில் சென்று சொல்லிவிட்டு வருகிறேன் என அவர்களிடம் சொன்னேன். ஆனால், பாரதிராஜா நீ அங்கே போகவே வேண்டாம் என சொன்னார்.

அதையும் மீறி சென்றேன்: ஆனால், நான் அதையும் மீறி அங்கு சென்று கமலிடம் இதை சொன்னேன். உடனே பேக்கப் என சொல்லிவிட்டு அவர் போய்விட்டார். அதன்பின் எனக்கு பதில் டெல்லி கணேஷ் நடித்தார்" என தெரிவித்திருக்கிறார். கமல் ஹாசனுடன் பாரதிராஜா எப்போதும் நெருக்கமானவர் என கருதப்பட்டிருக்கும் சூழலில் தியாகும் பகிர்ந்திருக்கும் இந்த விஷயம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X