டோவினோ தாமஸூக்கு ஆண் குழந்தை பிறந்தாச்சு.. செல்ல பெயர் என்னனு தெரியுமா ?

கொச்சி : தமிழில் மாரி படத்தில் நடித்த பிரபல நடிகருக்கு ஆண் பிறந்துள்ளது. முதன்முதலாக தனது மகனுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

புகைப்படத்தைப் பகிர்ந்த கையோடு தனது மகனுடைய பெயரையும், அவர் அவனை சுருக்கமாக அழைக்கும் செல்லப் பெயரையும் சொல்லி நெகிழ்ந்து வருகிறார்.

மேலும் அவரது பதிவிற்கு பலரும் வாழ்த்து சொல்லி வரும் நிலையில் நிவின் பாலியும் தனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்தார்.

வில்லன் நடிகர்

வில்லன் நடிகர்

மலையாள திரைப்பட துறையில் தனக்கென ஒரு ஸ்டைலையும் ரசிகர்களையும் கொண்டிருப்பவர் நடிகர் டோவினோ தாமஸ். இவர் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசம் காட்டி வரும் இவர் தமிழில் மாரி-2 வில் வில்லன் கதாபாத்திரத்தில் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயமானார்.

ஆண் குழந்தை

ஆண் குழந்தை

இவர் நடித்த மாயநதி, லூசிஃபர், மடோனா, கோதா போன்ற படங்கள் இவருக்கு மேலும் பல ரசிகர்களை பெற்றுத் தந்தது. இந்நிலையில் இப்போது இவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையுடன் எடுத்த புகைப்படத்தை சந்தோசமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் இப்போது ஆண் குழந்தை பிறந்ததில் மற்றற்ற மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.

விருதுகள்

விருதுகள்

இவர் நடித்த பாரன்சிக் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில். இவரது படங்களான கிலோமீட்டர் & கிலோமீட்டர், லூசிபர் போன்ற படங்களை ரசிகர்கள் அதிகமாக பேசி வருகிறார்கள் . மேலும் இவர் நடித்த மாயநதி, குப்பி போன்ற பல படங்களுக்கு சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றுள்ளார்.

மகள் இஷா

மகள் இஷா

டோவினோ தனது காதலி லிடியாவை கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு இஷா என்று பெயரிட்டுள்ளனர். இஷாவுடன் அவர் கொஞ்சி விளையாடும் வீடியோக்களையும் போட்டோக்களையும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்த இவருக்கு இப்பொழுது ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பார்த்துக்கொண்டே

பார்த்துக்கொண்டே

இந்நிலையில் டோவினோ தாமஸ் தனக்கு பிறந்த ஆண் குழந்தையின் முதல் போட்டோவை பகிர்ந்து பூரிப்படைந்துள்ளார். அதில் தனது மகளுடன் சேர்ந்து புதிதாக பிறந்த தன் மகனை பார்த்து ரசித்தவாறு, மகனைப் பார்த்துக் கொண்டே இருக்கணும் போல தோன்றுகின்றது அவன் மீது இருந்து என் கண்களை எடுக்க முடியவில்லை என தனது பாசத்தை கொட்டியுள்ளார்.

நிவின் பாலி

நிவின் பாலி

மேலும் அவனுக்கு நாங்கள் டஹான் டோவினோ என பெயர் இட்டுள்ளோம். அவனை நாங்கள் ஹான் என்று செல்லமாக கூப்பிட்டு வருகிறோம் என கூறும் அவருக்கு ரசிகர்கள் திரைத்துறை நண்பர்கள் என பலரும் வாழ்த்துக்கள் சொன்ன வண்ணம் உள்ளனர். டோவினோவின் நெருங்கிய நண்பரான நடிகர் நிவின் பாலி "வாழ்த்துக்கள் டோவினோ எனது அன்பான கட்டியணைப்பு டஹானுக்கு" என தனது வாழ்த்துக்களை அந்த பதிவில் தெரிவித்துள்ளனர். உங்கள் வாழ்த்துக்களுக்கும் அன்புக்கும் நன்றி என அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்து வருகிறார் டோவினோ.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X