தனுஷ் பட வில்லன் நடிகரின் மகனுக்கு முதல் பிறந்தநாள்… வைரலாகும் புகைப்படம் !

கொச்சி : மாரி2 படத்தில் நடித்த வில்லன் நடிகர் டோவினோ தாமஸின் இரண்டாவது மகனின் முதல் பிறந்த நாள் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

Recommended Video

South Celebrity Then and Now Photoshop Looks | Surya, Ajith, Dulquer Salaman - Shameem Lukman

செல்ல மகனின் பிறந்த நாள் கொண்டாட புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ள டோவினோ. கொரோனாவால் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறியுள்ளார்.

மேலும், அவரின் மகனுக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்த போட்டோ வைரலாகி வருகிறது.

வில்லன் நடிகர்

வில்லன் நடிகர்

மலையாள திரைப்பட துறையில் தனக்கென ஒரு ஸ்டைலையும் ரசிகர்களையும் கொண்டிருப்பவர் நடிகர் டோவினோ தாமஸ். இவர் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசம் காட்டி வரும் இவர் தமிழில் மாரி-2 வில் வில்லன் கதாபாத்திரத்தில் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களுக்கு பரீச்சியமானார்.

பல ரசிகர்கள்

பல ரசிகர்கள்

இவர் நடித்த மாயநதி, லூசிஃபர், மடோனா, கோதா, கிலோமீட்டர் & கிலோமீட்டர், பாரன்சிக் போன்ற படங்கள் இவருக்கு மேலும் பல ரசிகர்களை பெற்றுத் தந்தது. மாயநதி, குப்பி போன்ற பல படங்களுக்கு சிறந்த நடிகருக்கான விருதையும் இவருக்கு பெற்றுத்தந்தன.

மனைவி லிடியா

மனைவி லிடியா

டோவினோ தனது காதலி லிடியாவை கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு இஷா என்று பெயரிட்டுள்ளனர். இதையடுத்து இவருக்கு கடந்த இரண்டாவதாக பிறந்த ஆண் குழந்தைக்கு டஹான் டோவினோ என பெயர் வைத்துள்ளனர்.

முதல் பிறந்த நாள்

முதல் பிறந்த நாள்

இந்நிலையில் டஹான் டோவினோவின் முதல் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. அந்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ள டோவினோ, பிறந்த நாள் வாழ்த்துக்கள் மகனே, கடந்த ஊரடங்கின் போது நீ பிறந்தாய், தற்போதும் ஊரடங்கில் இருக்கிறோம். ஆனால், என்னைப் பொறுத்தவரை இது ஒரு விதத்தில் ஆசீர்வாதமாக இருந்தது. இந்த ஒரு வருடத்தில் உன்னிடம் நிறையே நேரம் செலவிட முடிந்தது என்று பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X