சவால் விட்ட வில்லன் நடிகர்.. கச்சிதமாக செய்து காட்டிய ஹீரோ..டிரெண்டிங் வீடியோ!

கொச்சி : வில்லன் நடிகர் அபு சலீம் விட்ட சவாலை ஏற்று அதை செய்து காட்டி அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் டோவினோ தாமஸ்.

மலையாள திரைப்பட உலகில் முன்னணி நடிகராகவும் பெண் ரசிகைகளை அதிகமாக கொண்டிருக்கும் ட்ரீம் பாயாகவும் வலம் வருபவர் டோவினோ தாமஸ். இவர் நடித்து வந்த "மின்னல் முரளி" என்ற படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கா பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு தளத்தில் போடப்பட்டுள்ள சர்ச் செட் ஒரு சிலரால் இடிக்கபட்டது மலையாளத் திரையுலகில் இருந்து பலரும் கண்டன கோஷங்களை எழுப்பினர் அதற்காக மலையாளத் திரையுலகில் இருந்து பலரும் கண்டன குரல்களை எழுப்பி வந்தனர்.

மிரட்டல் வில்லன்

மிரட்டல் வில்லன்

தமிழில் அபியும் அனுவும், மாரி 2 என சில படங்களே நடித்திருந்தாலும் தமிழ் மக்களால் பெரிதும் தெரியப்பட்டவர் டோவினோ தாமஸ். மாரி 2வில் தனுஷுக்கு வில்லனாக நடித்து தமிழ் மக்களுக்கு நன்கு பரிச்சயம் ஆனவர். அந்த படத்தில் இவரின் வில்லத்தனம் மிகவும் மிரட்டும் வகையில் இருந்தது.

முன்னணி நடிகர்

முன்னணி நடிகர்

தனது இயல்பான நடிப்பாலும் மயக்கும் அழகாலும் மக்களுக்கு நன்கு பரிட்சயம் ஆனவர் இவர். ஆரம்ப காலங்களில் பிரபுவிண்டே மக்கள், ஏபிசிடி போன்ற பல படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்த இவர் இப்போது மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஹீரோவை vs வில்லன்

ஹீரோவை vs வில்லன்

இந்நிலையில் நடிகர்கள் படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் உடற்பயிற்சியை மேற்கொண்டு தங்களது உடம்பை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள ஆசைப்படுவார்கள். அந்த வகையில் டோவினோ தாமஸும் வழக்கமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது வில்லன் நடிகர் அபு சலீம் இவருக்கு ஒரு பலப்பரீட்சையை வைத்து முடிந்தால் செய்து காட்டும்படி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

 முடிந்தால் எடுங்கள்

முடிந்தால் எடுங்கள்

அந்த வீடியோவில் அபு சலீம் கை கால்களை நீட்டியவாறு குப்புறப்படுத்து எந்த ஒரு உதவியும் இல்லாமல் கை கால்களை மட்டும் உந்தி மேலே எழுவார். என்னுடைய ஸ்டைலில் எடுக்கப்படும் தண்டால் இது முடிந்தால் இதை செய்து காட்டுங்கள் என டோவினோ தாமஸை அதில் டேக் செய்திருந்தார்.

வியந்த அபு

வியந்த அபு

அந்த சவாலுக்கு பதில் அளிக்கும் விதமாக டோவினோ தாமஸ் அதே போன்று உடற்பயிற்சி வீடியோவை தனது உடற்பயிற்சி கூடத்தில் அவர் சொன்னபடி எந்த ஒரு உதவியும் இல்லாமல் தண்டலை எடுத்துக்காட்டி அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு சவாலை செய்து முடித்து விட்டேன் என சொல்லியிருந்தார். அதற்கு அபு எனக்கு தெரியும் நீங்கள் செய்துவிடுவார்கள் என்று, நான் செய்ததை விட மிக எளிமையாக செய்துவிட்டீர்கள். ஒத்துக்குறேன் நீ ஒரு வீரன் என்கிறதை ஒத்துக்குறேன் என்று வடிவேலு பாணியில் அந்த வீடியோவிற்கு பதிலளித்துள்ளார்.

ரசிகர்கள் புகழாரம்

ரசிகர்கள் புகழாரம்

இந்த வீடியோ தற்போது பலராலும் பலமுறை பார்க்கப்பட்டு பகிரப்பட்டும் வருகிறது. இந்த வீடியோவை பார்த்த டோவினோவின் ரசிகர்கள் அவரை மலையாள சூப்பர்மேன் என்று புகழ்ந்து வருகின்றனர். பல லைக்ஸ் பதிவிடும் வருகின்றனர். ஹீரோயின்கள் அனைவரும் தங்களது கவர்ச்சி படங்களை தங்களது ரசிகர்களுக்காக வெளியிட்டு வரும் இந்த வேளையில் ஹீரோக்களும் தங்களது ரசிகர்களுக்காக பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மற்றும் வீர தீர பராக்கிரம செயல்களை செய்து அசத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X