தனுஷ் பட வில்லனுக்கு கொரோனா ... ரசிகர்கள் அதிர்ச்சி !
சென்னை : தனுஷின் மாரி 2 படத்தில் வில்லனாக நடித்த டொவினோ தாமஸுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
2012ம் ஆண்டு வெளிவந்த பிரபுவிந்தே மக்கால் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார்.
மின்னல் முரளி, குருப், கானேக்கானே, வழக்கு ஆகிய படங்களில் நடித்து பிஸியாக நடித்து வருகிறார்.

முன்னணி நடிகர்
மலையாளத் திரையுலகில் அசத்தி வரும் ஹீரோக்களில் ஒருவர் டொவினோ தாமஸ். மாயநதி, தீவண்டி, வைரஸ் போன்ற படங்களால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார். மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் நடித்த லூசிபர் படத்திலும் தனது நடிப்பால் அசத்தினார் டொவினோ.

வில்லன்
2018ம் ஆண்டு தமிழில் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் சாய் பல்லவி நடித்து வெளியான மாரி-2 படத்தில் வில்லனாக நடித்தார். இதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்த முகமானார் டொவினோ. மேலும் லூசிஃபர் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் கவனம் ஈர்த்தார்.

விரைவில் ரிலீஸ்
தாமஸ் நடிப்பில்பன்மொழியில் உருவாகி உள்ள மின்னல் முரளி படம் விரைவில் வெளியாக உள்ளது.பெங்களுர் டேஸ், முந்திரி வல்லிகள் போன்ற வெற்றிப்படங்களை தந்த வீக்கெண்ட் ப்ளாக் பஸ்டர் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
கொரோனா
இந்நிலையில், டொவினோ தாமஸுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. உடனேயே தனிமைப்படுத்திக் கொண்டேன். ஆனால், எனக்கு கொரோனாவுக்கான எந்த அறிகுறிகளும் இல்லாமலேயே தொற்று உறுதியாகியுள்ளது என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











