Trisha: சினிமாவில் இருந்து விலக த்ரிஷா முடிவு? அடுத்து என்ன விஜய் கட்சியா என கேட்கும் இணையவாசிகள்!

சென்னை: நடிகை த்ரிஷா, தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவிலும் டாப் கதாநாயகிகளில் ஒருவராக உள்ளார். பல முன்னணி கதாநாயகர்களின் படங்களில் த்ரிஷாவைத்தான் தேடித் தேடி புக் செய்து கொண்டு உள்ளார்கள். 22 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக வலம் வரும் த்ரிஷா, தற்போது சினிமாவில் இருந்து ஓய்வு எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக, தகவல் ஒன்று கோலிவுட் வட்டாரத்தில் வேகமாக பரவி வருகின்றது. அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

நடிகை த்ரிஷா, மௌனம் பேசியதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானாலும், அதற்கு முன்னர் இருந்தே, பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து கதாநாயகியாக ஆனவர். வசீகரமான முகம், திறமையான நடிப்பு, தெளிவான தமிழ் உச்சரிப்பு என த்ரிஷாவுக்கு இவை அனைத்தும் கை கொடுத்தது. இதனால் த்ரிஷா தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறக்கும் கதாநாயகியாக மாறினார்.

trisha vijay tvk party

விஜய், அஜித், ரஜினிகாந்த் என பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து வருகின்றார். தமிழ் சினிமாவில் சீனியர் நடிகைகளாக இருப்பவர்கள் என்றால் அது நம்பர் நடிகைகள் எனப்படும் த்ரிஷாவும், நயன்தாராவும் தான். இவர்கள் இருவருமே மார்க்கெட்டில் உச்சத்தில் உள்ளார்கள். மேலும், தங்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்கள்.

trisha vijay tvk party

த்ரிஷா: த்ரிஷா நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம், விடாமுயற்சி. அதைத் தொடர்ந்து தக் லைஃப் என பட்டியல் நீண்டு கொண்டே உள்ளது. இதுமட்டும் இல்லாமல், தற்போது சூர்யாவின் 45வது படத்தில் நடித்து வருகின்றார். இப்படி, இப்போதும் டாப் கதாநாயகர்களுடன் இணைந்து நடிக்கும் த்ரிஷா, தற்போது சினிமாவை விட்டு விலகலாம் என முடிவு செய்துள்ளார் என்ற தகவல் கோலிவுட் வட்டாரத்தில் வேகமாக பரவிவருகின்றது. '

trisha vijay tvk party

சினிமா: அதாவது , தான் சினிமாவில் இருந்து விலகுவது தொடர்பாக தனது அம்மாவிடம் த்ரிஷா தெரிவித்துள்ளார். அதற்கு த்ரிஷாவின் அம்மா, அதெல்லாம் முடியாது, சினிமாவில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும் எனக் கூறினாராம். ஆனாலும் த்ரிஷா சினிமாவில் இருந்து விலகலாம் என்பதில் தீர்மானமாக இருப்பதாக தகவல்கள் வேகமாக உலா வருகின்றது.

trisha vijay tvk party

அரசியல்: இந்தத் தகவலைக் கேள்விப்பட்ட ரசிகர்களும் இணையவாசிகளும், த்ரிஷா சினிமாவில் இருந்து விலகி, கொஞ்ச நாட்கள் எந்த கமிட்மெண்ட்டும் இல்லாமல் இருந்துவிட்டு, அதன் பின்னர் விஜய்யின், அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என சிலரும், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதற்காகத்தான் த்ரிஷா இப்படியான முடிவினை எடுத்துள்ளார் என சிலரும் பேசி வருகின்றனர். இதுவரை தகவலாக மட்டுமே உள்ள விஷயம், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை எனவும் பேசி வருகின்றனர். த்ரிஷா அரசியலில் களமிறங்கினாலும் தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என இந்தத் தகவலைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் கோரிக்கைகள் வைக்கத் தொடங்கிவிட்டனர்.

trisha vijay tvk party

வாய்ப்பே இல்லை: அஜித், விஜய், கமல்ஹாசன், டொவினோ தாமஸ் என முன்னணி நடிகர்களுடன் நடித்துக் கொண்டிருக்கும் த்ரிஷா திடீரென சினிமாவை விட்டு விலக வாய்ப்பே இல்லை என்றும் கூறுகின்றனர். த்ரிஷா என்ன முடிவு எடுத்தாலும் ரசிகர்களை மனதில் வைத்துக் கொண்டு தான் எடுப்பார் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X