சென்ற ஆண்டு.. இதே நேரத்தில்.. காப்பான் படப்பிடிப்பில்.. நினைவைபகிர்ந்த டி.ஆர்.கே.கிரண்!
சென்னை : நடிகர் மற்றும் கலை இயக்குனரான டி.ஆர்.கே.கிரண் காப்பான் படப்பிடிப்பு தளத்தில் இருந்த சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
நடிகர் மற்றும் கலை இயக்குனரான டி.ஆர்.கே.கிரனை நாம் பல படங்களில் பார்த்திருப்போம். இவர் கோ, வி.ஐ.பி, அனேகன், காதலும் கடந்து போகும் , எமன், கவண், காப்பான் மற்றும் சமீபத்தில் நான் சிரித்தால் ஆகிய படங்களிலும் நடித்திருப்பார்.

இவர் பல வருடமாக சினிமாவில் கலை இயக்குனராக பணியாற்றி வருபவர் பல படங்களில் மிக சிறந்த கலை இயக்கத்தை செய்துள்ளார். கலை இயக்கம் செய்த சில படங்களில் நடித்ததன் மூலம் அப்படியே நடிகராகி தற்போது பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் .
இவர் கடைசியாக காப்பான் படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்புக்காக கடந்த வருடம் இதே மாதத்தில் படக்குழுவுடன் வெளிநாட்டில் இருந்து இருக்கிறார். இதனால் தற்போது இந்த நினைவு கூறும் வகையில் அப்போது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கபட்ட புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார்.

இந்த புகைப்படங்களில் நாயகன் சூர்யா, நாயகி சாயிஷா , இயக்குனர் கே.வி.ஆனந்த் நடன இயக்குனர் ஷோபி ஆகியோர் இடம் பெற்று இருக்கின்றனர் இவர்களுடன் டி.ஆர்.கே.கிரணும் இருக்கிறார். தற்போது இந்த புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

காப்பான் படம் 2019ல் வெளியான படமாகும். கே.வி.ஆனந்தின் வழக்கமான ஸ்டைலில் உருவாகிய இந்த படம் கலவையான விமர்சனங்களையே ரசிகர்களிடம் பெற்றுத்தந்தது. இயற்கை விவசாயம், கார்ப்பரேட் முதலாளிகள் , நாட்டு அரசியல், தேசிய பாதுகாப்பு துறையினர் வாழ்க்கை என்று படம் பல விஷயங்களை பேசியிருக்கும் இருந்தும் திரைக்கதையில் ஏற்பட்ட தொய்வு படத்தை சற்று தடுமாற செய்தது .

டி.ஆர்.கே.கிரண் கே.வி.ஆனந்தின் கோ படத்திற்கு கலை இயக்கம் செய்திருப்பார் இந்த படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தும் அசத்தியிருந்தார். இந்த படத்தில் இவரது நடிப்பும் பலரால் பாராட்டபட்டு இருந்தது இதிலிருந்து கே.வி.ஆனந்தின் அத்தனை படங்களிலும் தொடர்ந்து முக்கிய கதாபாத்திரத்தில் டி.ஆர்.கே.கிரண் நடித்து இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











