ஏறுனா ஃப்ளைட்டு.. இறங்குனா காரு.. இப்போது 200 ரூபாய்க்கு நடிப்பு.. ஃபேமஸ் நடிகர் எமோஷனல்
சென்னை: நடிகர் டிஎஸ்ஆர் தர்மராஜை நிறைய படங்களில் பார்த்திருக்கலாம். விக்ரம் வேதாவில் விசாரணை கமிஷன் தலைவராக வந்தது, சர்தார் படத்தில் அதிகாரியாக வந்தது என பல படங்களில் நடித்திருக்கிறார். முக்க்கியமாக அயலி வெப் சீரிஸில் கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார். இந்தச் சூழலில் பட விழா ஒன்றில் கலந்துகொண்ட அவர் தனது திரையுலக பயணம் குறித்து எமோஷனலாக பேசினார். அது காண்போரை கலங்க செய்தது.
சமூகத்தில் இப்போது பிரபலமாவதற்கு கையில் ஸ்மார்ட் ஃபோனும், திறமையும் இருந்தால் போதும் என்ற நிலை இருக்கிறது. ஆனால் குறிப்பிட்ட வருடங்களுக்கு முன்னர் பலருக்கு திறமை மட்டும் இருந்தது. அந்தத் திறமையை வைத்துக்கொண்டு எப்படி விரைவிலேயே நட்சத்திரமாக ஜொலிக்கலாம் என்ற வழி தெரியவில்லை. அதற்கு அவர்களுக்கு வடிகாலாக அமைந்தது சினிமா. அதாவது சினிமா மூலம் பலரும் பிரபலமடைய தொடங்கினார்கள். அதன் காரணமாக பெரும்பாலானோர் சினிமா துறை மீது ஆர்வம் கொண்டு வர ஆரம்பித்தார்கள்.

காணாமல் போனவர்கள்: அப்படி வந்து பலரில் சிலர் வென்றிருக்கிறார்கள் சிலர் தோற்றிருக்கிறார்கள் சிலர் காணாமல் போயிருக்கிறார்கல். பலர் அதீத திறமை கொண்டு பெரிய அங்கீகாரம் கிடைக்காமலும் இருக்கிறார்கள். அந்தப் பலரில் ஒருவர்தான் நடிகர் டிஎஸ்ஆர் தர்மராஜ். குறைந்த உயரம், வித்தியாசமான முக அமைப்பு, தனித்த குரல் வளம் என தன்னிடம் இருப்பவைகளை வைத்து சிறந்த நடிகராக வலம் வர ஆரம்பித்தார்.

பிரபலமாக்கிய அயலி: ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று வாய்ப்பு கேட்ட அவர், இதயம் படத்தில் சின்ன சீனீல் வந்து பிறகு சேதுபதி படத்தில் விசாரணை கமிஷன் தலைவர் ரோல் ஏற்று சிறப்பாக நடித்து அடையாளப்பட்டார். முக்கியமாக அயலி வெப் சீரிஸ் அவருக்கு பெரும் பெயரை பெற்றுக்கொடுத்தது. தொடர்ந்து இதுவரை 70லிருந்து 80 படங்கள்வரை நடித்திருக்கிறார் அவர். மேலும் 30 படங்கள் அவரது நடிப்பில் ரிலீஸாகவிருக்கின்றன. இதற்கிடையே டெக்ஸ்டைல் பிஸினெஸ் லைனிலும் இருந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தர்மராஜ் எமோஷனல்: இந்நிலையில் பட விழா ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் டிஎஸ்ஆர் தர்மராஜ் பேசுகையில், "டெக்ஸ்டைல் துறையில் இருந்தபோது கோடி கோடியாக பணம் புழங்குபவர்களோடு பழகுவேன். அது பெரிய கடல். ஏறுனா ஃப்ளைட்டு, இறங்குனா காருனு இருந்தவன் நான். ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு இப்போது 200 ரூபாய்க்கு நடித்துக்கொண்டிருக்கிறேன். இதயத்தில் க்ரவுடு ஆர்ட்டிஸ்ட்டாக வந்து; சேதுபதி படத்தின் மூலம் வளர்ந்து அயலி மூலம் பிரபலமடைந்துவிட்டேன்.

கடுப்பாக இருக்கும்: சினிமாவில் சில நேரம் கடுப்பாக இருக்கும். அதாவது எப்போது நாம் கோடி கணக்கில் சம்பாதிக்கப்போகிறோம் என்று தோன்றிக்கொண்டே இருக்கும். ஏனெனில் டெக்ஸ்டைல் துறையை விட்டுவிட்டு பெரும் கனவோடு இந்த சினிமா துறைக்கு வந்தவன் நான். நிறையவே கஷ்டப்பட்டிருக்கிறேன் என்று எமோஷனலாக பேச்சினார். அவரது பேச்சு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











