மாமன்னன் படத்துக்கு பிறகு மீண்டும் நடிக்கும் உதயநிதி.. யார் டைரக்டர் தெரியுமா?
சென்னை : நடிகர் உதயநிதி தற்போது மாமன்னன் படத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
Recommended Video
முன்னதாக அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நெஞ்சுக்கு நீதி படத்தில் இவர் நடித்திருந்தார்.
திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் தற்போது 50 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது.

நெஞ்சுக்கு நீதி படம்
நடிகர் உதயநிதி, ஆரி, தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியானது நெஞ்சுக்கு நீதி படம். போனி கபூரின் ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் பேவியூ புராஜட்சுடன் இணைந்து ரோமியோ பிக்சர்ஸ் இந்தப் பட்த்தை தயாரித்திருந்தது. இந்தியில் வெற்றிபெற்ற ஆர்ட்டிகிள் 15 படத்தை தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டது.

50 நாள் கொண்டாட்டம்
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் சிறப்பான வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்தப் படத்தின் 50ம் நாள் வெற்றிக் கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் போனி கபூர், உதயநிதி, அருண்ராஜா காமராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அருண்ராஜாவிற்கு மோதிரம்
நிகழ்ச்சியில் போனி கபூர் உள்ளிட்டவர்கள், படத்தின் இணை தயாரிப்பாளர்கள் செண்பகமூர்த்தி, அர்ஜுன் துரை ஆகியோருக்கு தங்கச் சங்கிலியை அணிவித்தனர். இயக்குநர் அருண்ராஜா காமராஜூக்கும் மோதிரம் பரிசாக அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி இந்தப் படத்தில் அருண்ராஜாவுடன் இணைந்து பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவமாக அமைந்ததாக தெரிவித்துள்ளார்.

மீண்டும் அருண்ராஜாவுடன் படம்
மேலும் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துவரும் மாமன்னன் படத்திற்கு பிறகு மீண்டும் அருண்ராஜாவுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்தப் படத்தில் நடிப்பது முதலில் கடினமாக இருந்ததாகவும் பிறகு சரியாகி விட்டதாகவும் உதயநிதி மேலும் கூறினார்.

படத்தின் வெற்றிக்கு காரணம்
இந்தப் படத்திற்காக அருண்ராஜா காமராஜ் கடின உழைப்பை கொடுத்ததாகவும் அதுதான் இந்தப் படத்தின் வெற்றிக்கு காரணம் என்றும் அவர் மேலும் கூறினார். இந்தப் படத்திற்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த உதயநிதி, நல்ல படங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

உதயநிதியின் முடிவு
மாமன்னன் படத்திற்கு பிறகு நடிப்பை தொடராமல் முழுநேரமாக அரசியலில் ஈடுபட உள்ளதாக உதயநிதி தரப்பில் கூறப்பட்டது. ஆனால் சிறப்பான கதைகள் கிடைத்தால் தொடர்ந்து நடிப்பேன் என்று உதயநிதி தெரிவித்துள்ளார். அதன் ஒரு பகுதியாகத்தான் தற்போது அருண்ராஜா இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











