Udayanidhi: வெற்றிமாறன் கூட்டணியிலதான் கடைசி படத்துல நடிக்க இருந்தேன்.. உதயநிதி வருத்தம்!
சென்னை: நடிகர் உதயநிதி, வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள மாமன்னன் படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
இதையொட்டி படத்தின் பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். பல பேட்டிகளையும் கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் மாமன்னன் படம் குறித்து மட்டுமில்லாமல் பல்வேறு விஷயங்களையும் உதயநிதி, வடிவேலு, கீர்த்தி உள்ளிட்டவர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
கமல் தயாரிப்பில் நடிக்கவிருந்த படம் குறித்து மனம்திறந்த உதயநிதி: நடிகர் உதயநிதி, வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது மாமன்னன் படம். இந்தப் படம் இன்னும் இரு தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகிறது. இந்தப் படத்தில் வழக்கமான தன்னுடைய காமெடி ட்ராக்கிலிருந்து விலகி மிகவும் சீரியசான கேரக்டரில் வடிவேலு நடித்துள்ளார்.

தேவர் மகன் படத்தின் இசக்கி கேரக்டரை வைத்து இந்தப் படத்தில் வடிவேலு கேரக்டரையும் கம்பேர் செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே தன்னுடைய பேட்டியொன்றில் தேவர் மகன் படத்திற்கு பிறகு மாமன்னன்தான் தன்னுடைய கேரியரில் சிறப்பான படங்களில் ஒன்றாக தனக்கு அமைந்துள்ளதாக வடிவேலு தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் சில விஷயங்கள் சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில், படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.
படத்தின் புக்கிங்குகள் தற்போது துவங்கப்பட்டுள்ள நிலையில், படத்தை புக் செய்ய ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கத்தி துப்பாக்கியுடன் உதயநிதியும் வடிவேலுவும் அமர்ந்திருக்கும்படியான போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், படத்தின் ட்ரெயிலரும் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது. உதயநிதியின் கடைசி படமாக இந்தப் படம் அமைந்துள்ள நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு இதுவும் முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.
முன்னதாக கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உதயநிதி நடிக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், உதயநிதியின் இந்த முடிவால் அந்தப் படம் கைவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தன்னுடைய சமீபத்திய பேட்டியொன்றில் பேசிய உதயநிதி, இதுகுறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். கமல் தயாரிப்பில் தான் நடிக்கவிருந்த படத்திற்கு இயக்குநர் வெற்றிமாறன் தான் திரைக்கதை எழுதவிருந்த தகவலையும் அவர் பகிர்ந்துள்ளார்.
வரும் வியாழக்கிழமை மாமன்னன் படம் ரிலீசாகவுள்ளது. 4 நாட்கள் விடுமுறையை கணக்கில் கொண்டு இந்தப் படம் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களை இயக்கி ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய மாரி செல்வராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ள நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளதற்கு அதுவும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











