Udayanidhi: இந்தியன் 3 படமும் வருதா.. உதயநிதி பகிர்ந்த தகவல்!

சென்னை: நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வருகிறது இந்தியன் 2 படம்.

இந்தப் படத்தின் சூட்டிங் இன்னும் சில தினங்களில் நிறைவடையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், விரைவில் சூட்டிங்கை நிறைவு செய்ய ஷங்கர் திட்டமிட்டு பணியாற்றி வருகிறார்.

இந்தப் படத்தை லைகாவுடன் இணைந்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமும் தயாரித்து வருகிறது. இந்நிலையில் தயாரிப்பாளர் உதயநிதி படம் குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளார்.

இந்தியன் 3 படம் குறித்து அப்டேட் கொடுத்த உதயநிதி: நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்துவரும் படம் இந்தியன் 2. இந்தப் படத்தின் முதல் பாகம் சூப்பரான வரவேற்பையும் வசூலையும் குவித்த நிலையில், தற்போது படத்தின் இரண்டாவது பாகம் சிறப்பாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் சூட்டிங் 2018ம் ஆண்டிலேயே துவங்கப்பட்டது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். திட்டமிட்டபடி படம் உருவாகியிருந்தால் முன்னதாகவே இந்தப் படத்தை ரசிகர்கள் பார்த்திருக்கலாம்.

Actor Udayanidhi shared about Kamal haasan -Shankar combination Indian 3 movie

ஆனால் கொரோனா தாக்கம், படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து என இந்தப் படத்தை முடக்கியது. தொடர்ந்து கடந்த ஆண்டில் இந்தப் படத்தின் பிரச்சினைகள் பேசித் தீர்க்கப்பட்டு, சூட்டிங் துவக்கப்பட்டது. தற்போது படத்தின் சூட்டிங்கும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங், சென்னை, திருப்பதி, தைவான், ஆப்ரிக்கா என அடுத்தடுத்து இந்தியாவின் பல பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் படமாக்கப்பட்டுள்ளன.

இந்த சூட்டிங்கின்போது கமல்ஹாசனின் போட்டோகிராபி திறமையும் வெளிப்பட்டது. அடுத்தடுத்த சூட்டிங் ஸ்பாட்களில், அவர் தன்னுடைய கேமராவும் வலம்வந்து சிறப்பான பல புகைப்படங்களை எடுத்து தள்ளினார். மேலும் சித்தார்த்தின் சித்தா படத்திற்கு வரவேற்பு தெரிவித்து அவரே வடிவமைத்த வீடியோவையும் வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ குறித்து சித்தார்த் தன்னுடைய மகிழ்ச்சியையும் ஆச்சர்யத்தையும் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் மாமன்னன் படத்தின் பிரமோஷன்களில் பங்கேற்ற நடிகர் உதயநிதி, இந்தப் படத்தின் அப்டேட்களை பகிர்ந்துள்ளார். இந்தியன் 2 படத்தின் சூட்டிங் இன்னும் சில தினங்கள் நீடிக்கும் என்றும், சிஜி வேலைகளும் நடக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அதனால் படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கோடைக் கொண்டாட்டமாகத்தான் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தப் படம் குறித்து கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்தியன் 3 படத்தை உருவாக்கும் திட்டமும் உள்ளதாகவும் இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்தியன் 2 படப்பிடிப்பின் போது இதற்கான ஐடியாக்கள் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். முதலில் இந்தியன் 2 படத்தை ரிலீஸ் செய்துவிட்டு, தொடர்ந்து இந்தியன் 3 குறித்து முடிவு செய்யப்படும என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

விரைவில் இந்தியன் 2 படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்யவுள்ள கமல்ஹாசன், அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் குறுகிய கால தயாரிப்பாக உருவாகவுள்ள படத்தில் இணைகிறார். தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் KH234 படத்திலும் நடிக்கவுள்ளார். இந்தப் படங்களை தொடர்ந்தே இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் அவர் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியன் 2 படத்தின் சூட்டிங் நிறைவு செய்தவுடன் அவர் தனது அடுத்தடுத்த படங்கள் குறித்த அறிவிப்பை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X