அந்த படத்தில் விஜயுடன் நடித்த சிறுவன்: 17 வருஷத்துக்கு பிறகு மாஸ்டரில்.. எப்படி இருக்கார் பாருங்க!
சென்னை: நடிகர் விஜயுடன் திருமலை படத்தில் நடித்த சிறுவன் 17 வருடங்களுக்குப் பிறகு இளைஞராக மாஸ்டர் படத்தில் இணைந்துள்ளார்.
Recommended Video
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரிலீஸுக்கு தயாராக இருக்கும் படம் மாஸ்டர். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜூன் தாஸ், ஆண்ட்ரியா, ஷாந்தனு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப்படம் கடந்த 9ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகிறது.

17 வருடங்களுக்கு பிறகு
இந்நிலையில் படத்தில் நடித்த மற்றொரு நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விஜயின் திருமலை படத்தில் சிறுவனாக நடித்த உதய் ராஜ் 17 வருடங்களுக்குப் பிறகு மாஸ்டர் படத்தில் விஜயுடன் இணைந்து நடித்துள்ளார்.

கைதி படத்தில்..
உதய் ராஜ் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார். பின்னர் சில ஆண்டுகளாக சினிமாவில் தலைக்காட்டாமல் இருந்த உதய், கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி படத்தில் நடித்திருந்தார்.
மீண்டும் விஜயுடன்..
அதனை தொடர்ந்து அவரது மூன்றாவது படமான மாஸ்டர் படத்திலும் உதய் ராஜுக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார். அதனை உதய் ராஜ் தனது டிவிட்டர் பக்கத்திலும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், ஹாய் ஆல்.. இது நான் உதய்.. என்னுடைய அதிகரப்பூர்வ பக்கம். 17 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் விஜய் அண்ணாவுடன் இணைந்து நடித்திருக்கிறேன்.

மகேந்திரனும்..
திருமலை படத்தில் நடித்தேன், தற்போது மாஸ்டரில் நடித்திருக்கிறேன். என்னுடைய இயக்குநர் மற்றும் சகோதரரான லோகேஷ் கனகராஜ்க்கு பெரிய நன்றி என பதிவிட்டுள்ளார். நாட்டாமை உட்பட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் ஹீரோவாக அறிமுகமான மகேந்திரனும் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











