அவங்களுக்கு கொடுங்க.. அப்படியே நம்ம நடிகர் சங்கத்துக்கும் உதவி பண்ணுங்க.. பிரபல நடிகர் கோரிக்கை!
சென்னை: நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு, நடிகர், நடிகைகள் உதவ முன் வரவேண்டும் என்று நடிகர் உதயா கோரிக்கை வைத்துள்ளார்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவில் ஊரடங்குப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். தினசரி சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திரைத்துறை ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவுவதற்காக, நடிகர், நடிகைகள் பணம் மற்றும் பொருட்களை அள்ளிக் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும் உதவ வேண்டும் என்று, நடிகர் உதயா கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:
நடிகர் சங்கத்தில் 3500 உறுப்பினர்கள் இருக்காங்க. இதுல 2200 உறுப்பினர்கள் கஷ்டப்படற நிலையிலதான் இருக்காங்க. இந்த ஊரடங்கு நேரத்துல அவங்க நிலைமை இன்னும் கஷ்டம். அதனால, நடிகர், நடிகைகள், தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு தனியாக உதவ வேண்டும்னு கேட்டுக்கொள்கிறோம். நடிகர், கார்த்தி, நாசர், சூரி, நடிகர் விவேக், பூச்சிமுருகன், ஐசரி கணேஷ் உட்பட பலர் உதவி பண்ணியிருக்காங்க. அது மட்டும் போதாது.
கொரோனாவால் பாதிக்கப்படறதை விட பசி, பட்டினியால நம்ம நடிகர்கள் பாதிக்கக் கூடாது என்ற ஒரே எண்ணம்தான் இந்த கோரிக்கைக்கு காரணம். நம்ம குடும்பத்தை நாம்தான் பார்த்துக்கணும். நாம பார்க்கலைன்னா வேற யார் பார்ப்பாங்க? அதனால நடிகர் சங்கத்துக்கு உதவி பண்ண வேண்டும் என்பது தாழ்மையான வேண்டுகோள். அந்த அணி, இந்த அணி அப்படின்னு இல்லாம, ஒரே அணியாக உதவிகளை செய்ய வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











