twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    "விதைத்ததை மட்டுமே அறுக்க முடியும் விஷால்”... காட்டமான அறிக்கை வெளியிட்ட பிரபல நடிகர்

    விஷாலின் விமர்சனத்திற்கு அறிக்கை வாயிலாக பதிலடி கொடுத்துள்ளார் நடிகர் உதயா.

    |

    சென்னை: உத்தரவு மகாராஜா படத்திற்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்காததற்கு விஷால் தான் காரணம் என நடிகர் உதயா தெரிவித்துள்ளார்.

    தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மூத்த மகனும், இயக்குனர் விஜய்யின் அண்ணனுமான உதயா நடித்தப்படம் உத்தரவு மகாராஜா.

    இந்த படம் ரிலீசான சமயத்தில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலுக்கும் உதயாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து தயாரிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினர் பதவியை உதயா ராஜினாமா செய்தார்.

    இந்நிலையில், சமீபத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த விஷால், உத்தரவு மகாராஜா படம் சரியில்லாத காரணத்தால் தான் தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்றார்.

    இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள உதயா, உத்தரவு மகாராஜா படத்திற்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்காததற்கு விஷால் தான் காரணம் என தெரிவித்துள்ளார்.

    விஷாலின் விமர்சனம் :

    விஷாலின் விமர்சனம் :

    மேலும் அந்த அறிக்கையில் அவர், "சமீபத்தில் ஒரு ஆங்கில நாளிதழுக்கு தாங்கள் அளித்த பேட்டியில், உத்தரவுமகாராஜா திரைப்படத்தை சரியான கதைகளம் இல்லாததால், வெறும் நான்கு பேர் மட்டுமே பார்த்ததாக கூறியிருந்தீர்கள்.

    மதிக்கிறேன் :

    மதிக்கிறேன் :

    நான் அவருடைய கருத்துகள், விமர்சனங்கள் அது நேர்மறையாக இருந்தாலும் சரி, எதிர்மறையாக இருந்தாலும் சரி, அதை மதிக்கிறேன், பாராட்டுகிறேன். விமர்சனங்களில் இருக்கும் நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்கிறேன்.

    கண்மூடித்தனமான விமர்சனம் :

    கண்மூடித்தனமான விமர்சனம் :

    ஆனால், நான் கண்மூடித்தனமான விமர்சனங்களை ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை. துரதிர்ஷ்ட்டவசமாக எனது படம் குறித்த உங்கள் விமர்சனமும் அவ்வாறானதே. ஏனென்றால், நீங்கள் அந்தப்படத்தை பார்க்கவில்லை என்பதை உறுதியாக நம்புகிறேன்.

    பேரிடர்:

    பேரிடர்:

    எனது படத்தை திரையிடுவதற்கு போதுமான திரையரங்குகள் கிடைக்காமல் அவதியுற்றேன் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். ஏனென்றால், அந்த பேரிடருக்கு வழிவகுத்ததே நீங்கள் தான். இதற்கு நான் எனது ஆயுள் உள்ளவரை நன்றியுள்ளவனாக இருப்பேன்.

    எனக்கு திருப்தி:

    எனக்கு திருப்தி:

    எனது படத்திற்கு திரைதுறையினரிடமிருந்தும், ரசிகர்களிடமிருந்தும் மற்றும் அனைத்து ஊடகங்களிடமிருந்தும் நேர்மையான விமர்சனங்கள் கிடைத்திருக்கிறது. இந்த நேர்மையான விமர்சனங்கள் எனக்கு திருப்தி அளிப்பதாகவும் அமைந்திருக்கிறது.

    விஷாலுக்கு கேள்வி:

    விஷாலுக்கு கேள்வி:

    ஏனென்றால், இந்தப்படம் சராசரிக்கும் அதிகமான வியாபாரத்தை எனக்கு தந்திருக்கிறது. மிக குறைவான திரையரங்குகளிலேயே திரையிடப்பட்டிருந்த போதும், மக்கள் அதை ரசித்திருக்கிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி. ஒரு திரைப்படத்தை விமர்சனம் செய்வதில் எந்த தவறும் இல்லை. ஆனால் விமர்சனங்கள் தனிநபர் தாக்குதலாகவோ அல்லது இன்னபிற நோக்கங்களுக்காவோ இருக்க கூடாது. ஒரு பொறுப்புள்ள உயர் பதவியில் இருந்த நீங்கள் என்ன சாதித்தீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

    பிரபஞ்ச விதி:

    பிரபஞ்ச விதி:

    காலம் அனைத்தையும் நிரூபித்துக் காட்டும் நண்பரே. சொல்வதற்கு வேறொன்றும் இல்லை. "விதைத்ததை மட்டுமே அறுக்க முடியும்"என்ற எளிய பிரபஞ்ச விதியை நான் நம்புகிறேன். அயோக்யா படம் வெற்றி பெற எனது ஆத்மார்த்தமான பிரார்த்தனைகள். இறைவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும்", என நடிகர் உதயா தெரிவித்துள்ளார்.

    English summary
    Actor Udhaya counters actor Vishal for this comment on Utharavu Maharaja movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X