twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    "செக்யூரிட்டி" தேசப்பற்றை போற்றும் குறும்படம்.. திரைப்பிரபலங்கள் பாராட்டு !

    |

    சென்னை : தேசப்பற்றை போற்றும் வகையில் பல்வேறு திரைப்படங்கள் வந்திருந்தாலும், ஒரு சில குறும்படங்கள் மனதை தொடுகின்றன.

    Recommended Video

    தளபதி மாறவே இல்ல | ACTRESS SIMRAN EXPLAIN MASTER VIJAY | V-CONNECT | FILMIBEAT TAMIL

    நடிகர் உதயா எழுதி இயக்கியிருக்கும் செக்யூரிட்டி குறும்படம் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    பொழுதுபோக்கிற்காக லைக் மற்றும் கமெண்ட்கலுக்கு மட்டுமே ஆசைப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு குடும்பத்திற்கும், தேசத்திற்காக ராணுவத்தில் போராடிக் கொண்டிருக்கும் ஒரு குடும்பத்திற்கு இருக்கும் வித்தியாசத்தை அனைவரும் உணரும் வகையில் உருவாகியுள்ள இந்த செக்யூரிட்டி குறும்படம் சரியான தருணத்தில் வெளியாகிய அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது

    எம்மாடி ஆத்தாடி புகழ் .. சுசித்ராவுக்கு இன்று பிறந்தநாள் ..பிரபலங்கள் வாழ்த்து !எம்மாடி ஆத்தாடி புகழ் .. சுசித்ராவுக்கு இன்று பிறந்தநாள் ..பிரபலங்கள் வாழ்த்து !

    செக்யூரிட்டி குறும்படம்

    செக்யூரிட்டி குறும்படம்

    நாளை சுதந்திரதினம் கொண்டாட இருக்கும் நிலையில், சுதந்திர இந்தியாவின் மிக முக்கியமான நாளான ஆகஸ்ட் 15 ஆம் தேதியை போற்றும் வகையில் வெளியான பல்வேறு திரைப்படங்கள் நம் நினைவுக்கு வந்து செல்கிறது, இந்நிலையில் தேசப்பற்றை போற்றும் வகையில் தற்போது வெளியாகியுள்ள குறும்படம் ஒன்று அனைவரையும் ஈர்த்து பாராட்டுகளை பெற்றுள்ளது.

    கதாநாயகனாக அறிமுகம்

    கதாநாயகனாக அறிமுகம்

    இயக்குனர் ஏ எல் விஜய்யின் சகோதரரும் நடிகருமான உதயா தமிழ் திரைப்படங்களில் நடித்து மிகப்பிரபலமான நடிகராக இருந்து வருகிறார். திருநெல்வேலி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்யப்பட்ட உதயா, பின் பல்வேறு திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து அனைவருக்கும் பரிச்சயமானார்.

    தற்பொழுது இயக்குனர்

    தற்பொழுது இயக்குனர்

    திருநெல்வேலி, சக்கலக்க பேபி, கலகலப்பு, ஆவிக்குமார், உத்தரவு மகாராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள உதயா இதுவரை அனைவருக்கும் நடிகராக மட்டுமே பரிச்சயமாகி இருந்த நிலையில் தற்பொழுது இயக்குனராக அனைவரின் மனதையும் கவர்ந்து உள்ளார்.

    வெற்றி பெற்று

    வெற்றி பெற்று

    தேசப்பற்றை போற்றும் வகையில் பாடல்களையும் முக்கியமான நிகழ்வுகளையும் நினைவுகூர்ந்து வருகின்றனர். மேலும் இந்தியாவை போற்றும் வகையில் பல்வேறு தேசப்பற்று திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்தியாவில் பல மொழிகளில் பல படங்கள் வெளியாகி வெற்றியும் பெற்று வருகிறது. எனினும் திரைப்படங்கள் மூலம் தேசப்பற்றை அனைவருக்கும் பறைசாற்றிய இயக்குனர்களுக்கு மத்தியில், தற்பொழுது நடிகர் உதயா நமது தேசத்தை போற்றும் வகையில் குறும்படம் ஒன்றை இயக்கி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

    ராணுவ வீரரின் குடும்பத்தையும்

    ராணுவ வீரரின் குடும்பத்தையும்

    பொழுதுபோக்கிற்காக டிக் டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை இப்பொழுதும் பயன்படுத்திக்கொண்டு வாழ்க்கையை எதற்காக வாழ்கிறோம் என்று அறியாமல், லைக்குக்காகவும் ஷேருக்காகவும் ஆசைப்பட்டு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தையும், தங்கள் உயிரையும் துச்சமாக நினைத்து ராணுவத்தில் பணிபுரியும் ராணுவ வீரரின் குடும்பத்தையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது செக்யூரிட்டி குறும்படம்.

    ராணுவ வீரர் விஜயனின்

    ராணுவ வீரர் விஜயனின்

    நடிகர் உதயா ராணுவ வீரர் விஜயனின் தந்தை கதாபாத்திரத்தில் ஒரு வயதான செக்யூரிட்டி வேடத்தில் இந்த குறும்படத்தில் நடித்து பிரமாதப்படுத்தி இருப்பார். அவ்வாறு செக்யூரிட்டியாக உதயா வேலை செய்யும் குடியிருப்பில் அந்த பொழுதுபோக்கு குடும்பம் வசித்து வருகிறது. ஒரு நாள் அந்தக் குடும்பம் வெளியில் சென்று விட்டு மகிழ்ச்சியாக வீடு திரும்பும்பொழுது கேட்டை திறக்குமாறு புதிதாக வந்திருக்கும் செக்யூரிட்டியை(உதயா) திட்டி தீர்க்கிறார்கள். தான் புதிதாக செக்யூரிட்டி வேலையில் சேர்ந்து இருப்பதாகவும், குடியிருப்பில் யார் யார் தங்கி இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியாது எனவும் அந்த செக்யூரிட்டி கூற பின் அந்த குடும்பம் வழக்கம்போல புதிய வீடியோக்களை எடுத்தவாறு பாவ்லா காட்டிக் கொண்டு செல்கிறது.

    வீரமரணம்

    வீரமரணம்

    இந்நிலையில் செக்யூரிட்டியின் மகன் விஜயன் இந்திய ராணுவத்தில் பணியாற்றுகிறார்., விடுமுறை முடிந்து மீண்டும் பணியில் சேர செல்கிறார், இந்த உரையாடல்கள் முழுவதும் தொலைபேசியிலேயே நடக்க, பின்பு அந்த செக்யூரிட்டி தொலைபேசிக்கு அவரது மகன் விஜயன் எதிரி நாட்டுடன் போரிடும் பொழுது வீரமரணத்தில் இறந்துவிட்டார் என்ற செய்தியை இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரி தெரிவிக்கிறார்.

    நாட்டுக்காக உயிர் நீத்த

    நாட்டுக்காக உயிர் நீத்த

    ஒரு நாள் அந்த பொழுதுபோக்கு குடும்பம் தங்களது வீடியோக்கள் யூடியூபில் வைரல் ஆகிறதா என அலசி பார்க்கின்ற பொழுது பொழுதுபோக்கு வீடியோக்களையும் மீறி ஒரு வீடியோ மக்கள் அனைவராலும் பார்க்கப்பட்டு வைரலாகி வருகிறது. ராணுவத்தில் வீரமரணம் அடைந்த தன் மகனை பற்றி அந்த செக்யூரிட்டி தந்தை பேட்டி அளித்துள்ள அந்த வீடியோவை பார்த்த குடும்பம் மனம் வருந்தி, நாட்டுக்காக உயிர் நீத்த ஒரு ராணுவ வீரரின் தந்தையை கேட்டைத் திறந்து விடச் சொல்லி அவமானப்படுத்தி விட்டோமே என்ற குற்ற உணர்ச்சியில் அந்த பொழுதுபோக்கு குடும்பம் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் செக்யூரிட்டியாக வேலை செய்யும் செக்யூரிட்டியை தேடிச் சென்று மனதார மன்னிப்பு கேட்கின்ற, கிளைமேக்ஸ் காட்சியில் இந்த குட்டி பையன் செக்யூரிட்டியை பார்த்து சல்யூட் வைத்து "ஜெய்ஹிந்த்" என சொல்லும் காட்சி பார்ப்போர் அனைவரையும் சிலிர்க்க வைக்கிறது.

    English summary
    Actor Udhaya's 'security' tamil short film
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X