Maamannan :ஜூன் 1ம் தேதி நடக்கும் மாமன்னன் படத்தின் இசை வெளியீடு.. கமல் -ரஜினி பங்கேற்பு?

சென்னை : நடிகர் உதயநிதி, வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் மாமன்னன்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் உதயநிதியின் கடைசி படம் என்று கூறப்பட்டுள்ளது. படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் இசை வெளியீடு குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. மிகவும் பிரம்மாண்டமான அளவில் சென்னையில் இந்த இசை வெளியீடு நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Actor Udhayanidhis Maamannan movie audio launch to be planned on June 1st

உதயநிதி படத்தின் இசை வெளியீடு : நடிகர் உதயநிதி, வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் மாமன்னன். இந்தப் படத்தின் மிரட்டலான போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படத்தில் வடிவேலுக்கு மாறுப்பட்ட கேரக்டர் அமைந்துள்ளதாக முன்னதாக படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்திருந்த நிலையில், அதை நிருபிக்கும் வகையில் இந்த போஸ்டர்கள் அமைந்திருந்தன.

தன்னுடைய கடைசிப் படத்தில் மாரி செல்வராஜுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தை தெரிவித்த உதயநிதி, தான் நினைத்தபடியே அதை நிறைவேற்றிக் கொண்டுள்ளார். அரசியல் சார்ந்த கதைக்களத்தில் இந்தப் படம் பயணித்துள்ளதாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். கதையை சரியாக உள்வாங்கிக் கொண்டு சிறப்பாக உதயநிதி நடித்துக் கொடுத்துள்ளதாகவும் இதேபோல கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டவர்களும் சிறப்பாக நடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Actor Udhayanidhis Maamannan movie audio launch to be planned on June 1st

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படம் மிகச்சிறந்த வெற்றியை அவருக்கு பெற்றுத் தந்தது. இந்தப் படத்தில் எமராஜா என்ற கேரக்டர் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. இந்த கேரக்டரை வடிவேலு தன்னுடைய கையில் டாட்டூவாக குத்தியுள்ளார். இதன் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டான நிலையில், இந்தப் படம் எம்சியூ படமாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீடு குறித்து தற்போது அப்டேட் வெளியாகியுள்ளது. படத்தின் இசை வெளியீடு வரும் ஜூன் 1ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. உதயநிதியின் கடைசிப் படமான இந்தப் படத்தின் இசை வெளியீட்டில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தகவல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

Actor Udhayanidhis Maamannan movie audio launch to be planned on June 1st

இந்தப் படத்தில் நடிகர் வடிவேலுவும் முக்கியமான பாடல் ஒன்றை பாடியுள்ளார். அந்தப் பாடலின் புகைப்படங்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், படத்தின் பாடல்கள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையில் பாடல்கள் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே விரைவில் படத்தின் பாடல் ஒன்று வெளியாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X