“விக்ரம்“ நிச்சயம் பிளாக் பஸ்டர் ஹிட்.. கமலுக்கு வாழ்ந்து சொன்ன உதயநிதி!

சென்னை : உலகநாயகன் கமல்ஹாசனின் நடிப்பில் விக்ரம் திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வரும் நிலையில், நடிகர் உதயநிதி ஸ்டாலின் கமலஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இப்படத்தில், கமலுடன் , விஜய்சேதுபதி, பக்த் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், சேம்பன் வினோத், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, சம்பத்ராம், ஹரிஷ் பெறடி, ஆண்டனி வர்கீஸ், சிவானி, மகேஸ்வரி, மைனா, நந்தினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

விக்ரம்

விக்ரம்

கமலஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் விக்ரம். இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சாந்தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், ஃபகத் ஃபாசில் அமர் ரோலிலும்,கமல்ஹாசன் அருண்குமாராகவும் நடித்துள்ளனர். கைதி, மாஸ்டர் திரைப்படத்தை விட விக்ரம் படம் மெர்சலாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தரமான சம்பவம்

தரமான சம்பவம்

அன்பறிவு மாஸ்டர்ஸ் ஸ்டண்ட் இயக்கத்தில் அதிரடி ஆக்சன் திரைப்படமாக வெளியாகி இருக்கும் விக்ரம் படத்திற்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவில் ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். அனிருத் இசையில் உலகநாயகன் எழுதி பாடி வெளிவந்த "பத்தல பத்தல" பாடல் ஒவ்வொன்றும் குறை ஏதும் சொல்ல முடியாத அளவுக்கு தரமாக உள்ளது.

வெறித்தனம்

வெறித்தனம்

மேலும், ஆண்டவரை வைத்து லோகேஷ் கனகராஜ் சம்பவம் செய்து விட்டதாகவும் படம் செம்ம என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். முதல் பாதி வெறித்தனம் என்றும் இரண்டாவது பாதி டெர்ரிஃபிக் என்றும் கமெண்டுகள் இணையத்தில் குவித்து வருகின்றனர். விக்ரம் படத்தை ரசிகர்கள் மட்டுமில்லாத, திரைப்பிரபலங்களும் ரசிகர்களோடு ரசிகர்களான படம்பார்த்தனர்.

சாதனையை நிகழ்ந்தும்

சாதனையை நிகழ்ந்தும்

இந்நிலையில், நடிகரும், எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின், உலகநாயகன் கமலஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள உதயநிதி ஸ்டாலின், உலகநாயகன் கமல் சாரின் திரைப்படம் இன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில், சாரை நேரில் சந்தித்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்தோம். கமல் சாரின் கலைப் பயணத்தில் விக்ரம் நிச்சயம் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தும் என உதயநிதி ஸ்டாலின் அதில் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X