மகனைப் பார்த்து மிரண்ட உதயநிதி.. எதுக்காக தெரியுமா.. பார்க்கலாம் வாங்க!
சென்னை : நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் பல படங்களை வெளியிட்டு வருகிறார்.
இவரது நடிப்பில் சமீபத்தில் நெஞ்சுக்கு நீதி என்ற படம் வெளியானது. இந்தப் படம் சிறப்பான வரவேற்பை பெற்றது.
தற்போது மாமன்னன் படத்தில் அவர் நடித்து வருகிறார். இதில் அவருக்கு கீர்த்தி சுரேஷ் ஜோடியாகியுள்ளார்.

நடிகர் உதயநிதி
நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் பல சிறப்பான படங்களை தமிழில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் இவரது நெஞ்சுக்கு நீதி படம் ரிலீசானது. இந்தப் படம் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியானது. படம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் படமாக வெளியாகி வரவேற்பை பெற்றது.

சிறப்பான படங்கள்
தயாரிப்பாளராகவே தனது திரைப்பயணத்தை துவக்கினார் உதயநிதி. தொடர்ந்து நடிகராகவும் கலக்கி வருகிறார். ஆரம்பத்தில் காமெடி படங்களில் நடிக்கத் துவங்கி தொடர்ந்து அழுத்தமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சிறப்பான இயக்குநர்களின் படங்களை தேர்ந்தெடுத்தும் நடித்து வருகிறார்.

மாமன்னன் படம்
தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்ன படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாகியுள்ளார் கீர்த்தி சுரேஷ். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தப் படத்தில் வடிவேலு காமெடி கேரக்டரில் இணைந்துள்ளார். இவையெல்லாம் இணைந்து படத்திற்கு சிறப்பான எதிர்பார்ப்பை கொடுத்துள்ளன. மாமன்னன் படத்திற்கு இசையமைத்து வருகிறார் ஏஆர் ரஹ்மான்.

பன்முக தளங்களில் ஆக்டிவ்
தொடர்ந்து படத்தயாரிப்பில் மட்டுமில்லாமல் படங்களை விநியோகித்தும் வருகிறார் உதயநிதி. நடிப்பு, தயாரிப்பு, அரசியல் என அனைத்து தளங்களிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் உதயநிதி. ட்விட்டர் பக்கத்திலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார்.

மகனை பார்த்து மிரண்ட உதயநிதி
இந்நிலையில் தன்னுடைய மகன் இன்பநிதியை, உதயநிதி மிரண்டு பார்க்கும் புகைப்படத்தை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில் தன்னுடைய மகனின் கையின் பலத்தைதான் அவர் மிரட்சியுடன் பார்க்கிறார். இந்தப் படம் தற்போது சமூக வலைதளங்களில் வைராகி வருகிறது.
Recommended Video

சிறப்பான படங்களை வெளியிடும் உதயநிதி
உதயநிதி தொடர்ந்து தமிழின் சிறப்பான படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் விக்ரம் படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய உதயநிதி, தற்போது விக்ரமின் கோப்ரா மற்றும் மாதவனின் ராக்கெட்ரி உள்ளிட்ட படங்களின் தமிழக வெளியீட்டு உரிமையையும் கைப்பற்றியுள்ளார்.


Click it and Unblock the Notifications











