twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிறு கதாபாத்திரங்களிலும் முத்திரை பதித்தவர் செல்லத்துரை… உதயநிதி ஸ்டாலின் புகழாரம் !

    |

    சென்னை : தமிழ் திரைத்துறையில் மூத்த நடிகரும் குணசித்திர நடிகருமான செல்லத்துரை அவரது இல்லத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

    வீட்டில் சுயநினைவின்றி இருந்த இவரை, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்து சென்ற நிலையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

    என் முதல் படத்தின் ஒளிப்பதிவாளர்.. இயக்குநர் கே.வி. ஆனந்த் மறைவால் மனம் உடைந்து போன விஷால்என் முதல் படத்தின் ஒளிப்பதிவாளர்.. இயக்குநர் கே.வி. ஆனந்த் மறைவால் மனம் உடைந்து போன விஷால்

    இவருடைய இறப்பு திரைத்துறையினர் மத்தியில் மீண்டும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பல படங்களில்

    பல படங்களில்

    ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் அவர்கள் நடித்திருந்த கத்தி திரைப்படத்திலும், நயன்தாரா நடித்திருந்த அறம், அட்லி இயக்கிய தெறி, தனுஷின் மாரி, ரஜினிகாந்தின் சிவாஜி உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

    முக்கியமான கதாபாத்திரம்

    முக்கியமான கதாபாத்திரம்

    விஜய்யுடன் தெறி திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் இவரின் தந்தை கதாபாத்திரம் காண்போர் கண்களில் கண்ணீரை வரவைக்கும் வகையில் தத்துரூபமாக அமைந்து இருக்கும். இந்த படத்திற்கே பெரும் திரும்புமுனையை ஏற்படுத்தும் வகையில் இவரின் வசனம் அந்த படத்தில் அமைந்து இருக்கும்.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    தனுஷூன் மாரி படத்திலும், உதயநிதி ஸ்டாலுடன் மனிதன், ராஜா ராணி, நட்பே துணை ஆகிய படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் செல்லத்துரை. இவரின் மரண செய்தி திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் இவருக்கு ட்விட்டர் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றன.

    முத்திரை பதித்தவர்

    இந்த வகையில், உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், குணச்சித்திர நடிகர் அண்ணன் செல்லத்துரை அவர்கள் மறைந்தது அறிந்து வேதனையடைந்தேன். சிறு கதாபாத்திரங்களிலும் முத்திரை பதித்த திறமைக்காரர். மனிதன் திரைப்படத்தில் நடித்த போது அவரோடு பழகும் வாய்ப்பை பெற்றேன். ஆகச்சிறந்த மனிதர். அண்ணனின் இறப்புக்கு ஆழ்ந்த இரங்கல். குடும்பத்தாருக்கு ஆறுதல் என்று பதிவிட்டுள்ளார்.

    Read more about: இரங்கல்
    English summary
    Actor Udhayanithi Stalin condolences to actor Chelladurai demise
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X