அவரின் அகால மரணம் என்னை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.. சேது மரணம் குறித்து உதயநிதி உருக்கம்!

சென்னை: நடிகர் சேதுராமனின் மறைவு குறித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் உருக்கமாக டிவிட்டியிருக்கிறார்.

Recommended Video

Dr.SethuRaman Memories | Sahana | Unmaiyal | KLTA

கண்ணா லட்டு தின்ன ஆசையா, வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சேதுராமன். தோல் சிகிச்சை மருத்துவரான இவர் சென்னை அண்ணாநகரில் ZI Clinic என்ற மருத்துவமனையை நடத்தி வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் மருத்துவ துறையினரும் இரங்கல் தெரிவித்தனர்.

ஒன்றரை வயது மகள்

ஒன்றரை வயது மகள்

36 வயதான சேதுவின் மரணம் திரைத்துறையினரை தாண்டியும் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நடிகர் சேதுவுக்கு திருமணமாகி இன்னும் 4 ஆண்டுகள் கூட நிறைவடையாத நிலையில் அவரது மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சேதுவுக்கு உமையாள் என்ற மனைவியும் ஒன்றரை வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

உடைந்து போன சந்தானம்

உடைந்து போன சந்தானம்

சேதுவின் அகால மரணத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து பலரும் இன்னும் மீளவில்லை. எம்ஆர்சி நகரில் உள்ள சேதுவின் வீட்டிலேயே அவருக்கு நேற்று இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன. அவரது நெருங்கிய நண்பரான சந்தானம், சேதுவின் மரணத்தால் மிகவும் உடைந்து போயுள்ளார்.

பெசன்ட் நகரில்

பெசன்ட் நகரில்

சேதுவின் மரணத்தை அறிந்து அவரது வீட்டிற்கு சென்ற அவர், அவரது உடல் தகனம் செய்யப்படும் வரை உடனிருந்தார். சேதுவின் உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது. ஊரடங்கு அமலில் உள்ளதால் சேதுவின் இறுதி ஊர்வலத்தில் அதிகம் பேர் பங்கேற்கவில்லை.

உதயநிதி இரங்கல்

உதயநிதி இரங்கல்

இறுதியாக பெசன்ட் நகர் மின் மயானத்திற்குள் தனது நண்பனான சேதுவின் உடலை கண்ணீருடன் சுமந்து சென்றார். இந்நிலையில் நடிகர் சேதுவின் மரணம் குறித்து நடிகரும் அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

பேரதிர்ச்சி

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், சேதுராமன்.. நல்ல மனிதர், நல்ல நண்பர், சிறந்த மருத்துவர், திரைப்பட நடிகர். அவரின் அகால மரணம் என்னைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சேதுவை இழந்து வாடும் அவரின் குடும்பத்தாருக்கும், அவரின் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X