மனைவிக்கு இறுதிச்சடங்கு.. கவச உடையில் வந்த அருண்ராஜா.. கட்டியணைத்த உதயநிதி.. கலங்க வைக்கும் போட்டோ!

சென்னை: தனது மனைவிக்கு இறுதிச் சடங்கு செய்ய கவச உடையில் வந்த இயக்குநர் அருண்ராஜாவை உதயநிதி ஸ்டாலின் கட்டியணைத்த போட்டோ வெளியாகி கலங்க செய்துள்ளது.

நடிகர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர் என பல முகங்களை கொண்டவர் அருண்ராஜா காமராஜ்.

ஆர்யா, நயன்தாரா நடிப்பில் வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் அருண்ராஜா காமராஜ்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

மான் கராத்தே, ரெமோ, மரகத நாணயம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் அருண் ராஜா. இவரது மனைவி சிந்துஜா. 38 வயதான சிந்துஜாவும் அருண்ராஜா காமராஜும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

சிகிச்சை பெற்ற சிந்துஜா

சிகிச்சை பெற்ற சிந்துஜா

இந்நிலையில் சிந்துஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் சிந்துஜா.

கொரோனாவால் மரணம்

கொரோனாவால் மரணம்

நேற்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் உருக்கமாக இரங்கல் தெரிவித்தனர். அருண்ராஜா காமராஜும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கவச உடையில் கதறல்

கவச உடையில் கதறல்

இந்நிலையில் தனது மனைவி மரணத்தை அறிந்த அருண்ராஜா மருத்துவர்களின் அனுமதியோடு கவச உடை அணிந்து வந்து மனைவிக்கு இறுதிச்சடங்குகளை செய்தார். மனைவிக்கு இறுதிச் சடங்கு செய்ய வந்த அருண் ராஜா காமராஜ் மனைவியின் உடலை பார்த்து கதறியழுதார்.

கட்டியணைத்த உதயநிதி

கட்டியணைத்த உதயநிதி

சிந்துஜாவின் உடலுக்கு நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். கவச உடையுடன் வந்து மனைவியின் உடலை பார்த்து கதறிய அருண்ராஜாவை கட்டியணைத்த உதயநிதி ஸ்டாலின், கண்ணீர்மல்க ஆறுதல் கூறினார்.

கலங்க வைக்கும் போட்டோ

கலங்க வைக்கும் போட்டோ

அருண்ராஜா காமராஜை உதயநிதி ஸ்டாலின் கட்டியணைத்த போட்டோ வைரலாகி வருகிறது. கொரோனாவோடு கவச உடையில் வந்த அருண்ராஜவை தொட்டு ஆறுதல் கூற உறவினர்களே பக்கத்தில் வராத நிலையில் உதயநிதி ஸ்டாலின் கட்டியணைத்தது ரசிகர்களை கலங்க செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X