Don't Miss!
- Finance
முகேஷ் அம்பானி காட்டில் பண மழை.. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் Q3ல் ரூ.15,792 கோடி லாபம்..!
- News
எவ்வளவு ’துணிவு’ உங்களுக்கு.. வாரிசு ரேஸால் ஓனர்களுக்கு சிக்கல்! 34 தியேட்டர்களுக்கு பறந்த நோட்டீஸ்!
- Lifestyle
வீக்கத்தைத் தடுக்க குளிர்காலத்தில் இந்த 5 உணவுகள நீங்க சாப்பிடவே கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Automobiles
டெலிவரி தொடங்கியாச்சு.. இனி ஃபார்ச்சூனருக்கு பதிலா இந்த காருலதான் எல்லா அரசியல்வாதிகளும் வலம் வர போறாங்க!
- Technology
பந்துக்கு பந்து சிக்ஸ் அடிக்கும் Vivo: 5ஜி போன் இல்லாத எல்லாரும் கொடுத்து வச்சவங்க!
- Sports
நீங்க வந்தா மட்டும் போதும்.. ரிஷப் பண்ட்-யிடம் பாண்டிங் வைத்த சுவாரஸ்ய கோரிக்கை.. ரசிகர்கள் பாராட்டு
- Travel
சென்னையிலிருந்து திருப்பதி – தரிசன டிக்கெட் முன்பதிவு, பயணச் செலவுகள், தங்குமிடம் புக்கிங் – இதர தகவல்கள்!
- Education
TNPSC Road inspector Recruitment 2023:சிவில் டிராட்மென்ஷிப் சான்றிதழ் இருந்தால் 716 பேருக்கு வாய்ப்பு..!
வீட்டில் தூக்கில் தொங்கிய காமெடி நடிகரின் மனைவி.. போலீஸ் விசாரணை..நடந்தது என்ன?
கேரளா : காமெடி நடிகரின் மனைவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகர் தான் உல்லாஸ் பந்தளம். இவர் தொலைக்காட்சிகளில் காமெடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார்.
தற்போது, உல்லாஸ் பந்தளுமுக்கு மலையாள படங்களில் நடிக்க வாய்ப்புகள் வர, படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
'தெறி'ரீமேக்கில்
நடித்தால்
தற்கொலை
செய்து
கொள்வேன்...பவன்
கல்யாணுக்கு
மிரட்டல்
கடிதம்!

காமெடி நடிகர் உல்லாஸ் பந்தளம்
38 வயதான உல்லாஸ் பந்தளம் திங்கட்கிழைமை தனது மனைவி ஆஷாவை காணவில்லை என பத்தனம்திட்டா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், வீட்டின் முதல் மாடியில் ஆஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

புதுவீடு வாங்கினேன்
இதையடுத்து, போலீசார் காமெடி நடிகரிடம் மடக்கி மடக்கி விசாரணை செய்தனர். அதில், அண்மையில் தான் இந்த வீட்டை வாங்கியதாகவும், மனைவி ஆஷா,மகன்கள் இந்திரஜித், சூர்யஜித்துடன் இந்த வீட்டில் வசித்து வந்ததாகவும், சம்பவத்தன்று எனக்கும் என் மனைவிக்கும் சிறிய சண்டை ஏற்பட்டது. இது அனைவரின் குடும்பத்தில் ஏற்படும் சாதாரண சண்டைதான்.

பல இடங்களில் தேடினேன்
சண்டை காரணமாக ஆஷா என்னிடம் கோபித்துக்கொண்டு மாடிக்கு குழந்தைகளுடன் படுக்க சென்றுவிட்டாள். சிறிது நேரம் கழித்து,நான் மேலே சென்று பார்த்த போது அங்கு அவர் இல்லை. இதனால், நான் பல இடங்களில் தேடினேன். தேடியும் கிடைக்காததால் தான் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

தற்கொலைக்கு காரணம் இதுதான்
ஆஷா தற்கொலை பற்றி ஆஷாவின் தந்தையிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், என் மருமகனுக்கும், மகளுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. என் மகளை அவர் நன்றாகவே கவனித்துக்கொண்டார். ஆனால், என் மகளுக்கு மனநல பிரச்சனை இருப்பதால்,அவர் தற்கொலை செய்திருக்கக்கூடும் என்று தான் நினைப்பதாகவும், உல்லாஸ் மீது எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவர் மீது புகார் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டதால், போலீசார் இந்த வழக்கை தற்கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர்.