Umapathy & Aiswarya: உமாபதி -ஐஸ்வர்யாவிற்கு எப்போ கல்யாணம் தெரியுமா.. வெளியானது சூப்பர்குட் நியூஸ்!
சென்னை: நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி மற்றும் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜூன் இருவரும் காதலித்து வருகின்றனர்.
இவர்களது காதலை இரு குடும்பத்தினரும் ஏற்றுள்ள நிலையில் விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து நடிகர் அர்ஜூனோ மற்றும் தம்பி ராமையாவோ இதுவரை வெளிப்படையாக எதுவும் பேசாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

உமாபதி -ஐஸ்வர்யா அர்ஜூன் திருமண அப்டேட்: நடிகர் தம்பி ராமையா தமிழின் முன்னணி காமெடியனாக காணப்படுகிறார். இவர் பல படங்களில் கேரக்டர் ரோல்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுததி வருகிறார். இவரது மகன் உமாபதி, அதாகப்பட்டது மகாஜனங்களே என்ற படத்தின்மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து மணியார் குடும்பம், திருமணம், தண்ணி வண்டி போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார். தொடர்ந்து சில படங்களிலும் கமிட்டாகி வருகிறார்.
இதேபோல நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜூன், விஷாலுடன் இணைந்து பட்டத்து யானை என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து சொல்லிவிடவா என்ற படத்திலும் நடித்தார். ஆனால் இவர் தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில் உமாபதிக்கும் ஐஸ்வர்யாவிற்கும் எப்படி காதல் உருவானது என்பது குறித்துதான் தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நடிகை ஐஸ்வர்யா அர்ஜூன், சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ள நிலையில், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ரசிகர்கள் இதுகுறித்து கேட்டுள்ளனர். ஆனால் தன்னுடைய அப்பா அர்ஜூன் இதுகுறித்து அறிவிக்க வேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ, ஐஸ்வர்யா எந்த பதிலையும் ரசிகர்களுக்கு கொடுக்காமல் உள்ளார். இந்நிலையில் இவர்களின் திருமணம் அடுத்த ஆண்டு பிப்ரவரி நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே இவர்களுக்குள் எப்படி காதல் ஏற்பட்டது என்பதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டில் அர்ஜூன் நடத்திய சர்வைவர் ஷோவில் ஒரு போட்டியாளராக உமாபதி இருந்தார். இந்த நிகழ்ச்சியின்போதுதான் உமாபதிக்கும் ஐஸ்வர்யாவிற்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மலர்ந்ததாக சமீபத்தில் பேட்டியொன்றில் பேசிய தம்பி ராமையா கூறியுள்ளார். மேலும் கடந்த ஆண்டில் நடிகர் அர்ஜூன் கட்டிய ஆஞ்சநேயர் கோயிலின் திறப்பு விழாவில் கலந்துக்கொண்ட இரு குடும்பத்தாரும் இவர்களது திருமணத்தை நிச்சயித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவர்களது திருமணம் அடுத்த ஆண்டில் பிப்ரவரியில் நடக்கவுள்ளதாகவும் வரும் நவம்பர் 8ம் தேதி உமாபதி பிறந்தநாளின்போது இந்த திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளதாகவும் தற்போது கூறப்பட்டுள்ளது. அடுத்தடுத்த படங்களில் நடித்த உமாபதி, தற்போது இயக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இவரது இயக்கத்தில் ராஜாக்கிளி என்ற படம் உருவாகியுள்ளது. விரைவில் இந்தப் படம் ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











