நிகிலா விமலுடன் ரொமான்ஸ் செய்ய பயந்த ஹீரோ... முத்தக்காட்சிக்கு நடிகரே போட்ட தடை!

கேரளா: மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உன்னி முகுந்தன். இவர் சூரி நடிப்பில் வெளியா கருடன் படத்தில் வில்லனாக மிரட்டியிருந்தார். மலையாள திரையுலகில் இன்னும் திருமணம் ஆகாமல் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலராகவும் வலம் வருகிறார். இதனிடையே, படத்திற்காக காதல் காட்சியில் ரொமான்ஸ் என்றால் கொஞ்சம் தயங்குவேன் என ஓப்பனாக தெரிவித்துள்ளார்.

கருடன் படத்தில் இருப்பதற்கும், மார்கோ படத்தில் இருந்த உன்னி முகுந்தனுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தது. ஆளே அடையாளம் தெரியாமல் அவர்தானா என்றே நெட்டிசன்கள் வாயை பிளந்தனர். கடந்தாண்டு வெளியான மார்கோ திரைப்படம் முழுக்க ரத்தம் தெறிக்கும் சண்டைக் காட்சிகள் இடம்பெற்று மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. உலகளவில் படம் ரிலீஸ் ஆன 5 நாளில் ரூ.50 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. 100 கோடி வசூல் கிளப்பிலும் இப்படம் இணைந்தது.

Unni Mukundhan Kiss Scene Get Set Baby

ஜாலியான காதல் படம்: மார்கோ படத்தின் மூலம் மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ள உன்னி முகுந்தன், இதை விட பக்கா கமர்ஷியல் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வித்தியாசமான முழு நீள காமடி படத்தில் நடித்து முடித்துள்ளார். முற்றிலும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட கெட் செட் பேபி படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியானது. இப்படத்தில் நிகிலா விமல் ஹீரோயினாக நடித்துள்ளார். படம் முழுக்க காமெடி காதல் என பார்ப்பவரை என்ன கதை என்று யூகித்தாலும், பக்காவான காமெடி படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ரொமான்ஸ் மட்டும் வேண்டாம்: மலையாளத்தில் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் உன்னி முகுந்தன் திருமண வயதை எட்டியும் பேச்சுலராக சுற்றி வருகிறார். குறிப்பாக நடிகைகளுடன் ரொமான்ஸ் மற்றும் முத்தக் காட்சிகள் இடம்பெறாதவாறு கவனமாக நடித்து வருகிறார். நடிகர், நடிகைகள் யாராக இருந்தாலும் முத்தக்காட்சியில் நடிக்க விருப்பம் தெரிவிப்பர். நடிப்பு என்று வந்துவிட்டால் இதையெல்லாம் பார்க்க கூடாது என தெரிவிப்பார்கள். ஆனால், இவர் கொஞ்சம் வித்தியாசம் தான் என நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர்.

Unni Mukundhan Kiss Scene Get Set Baby

இது தான் காதலா: கெட் செட்பேபி படத்தில் நிகிலா விமலுடன் நடித்த அனுபவம் குறித்து உன்னிமுகுந்தன் தெரிவித்துள்ளார். அதில், எனக்கு காதல் காட்சிகள் என்றால் முத்தம் கொடுத்தோ நெருக்கமாக இருந்தோ அல்லது கட்டிப்பிடித்து தான் தெரிவிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கடந்த ஏழு வருடங்களில் அப்படியே எனகு பழகி விட்டது. நிகிலா விமலுடன் ரொமாண்டிக் காட்சிகளில் நடிப்பது சவாலாகவே இருந்தது என கூறியுள்ளார். என்னப்பா இப்படி ஒரு நடிகரா என்றும் பலரும் ஹார்ட்டின் விடுகின்றனர்.

சாக்லெட் பாய் உன்னி முகுந்தன்: குணச்சித்திரம், வில்லன், சாக்லெட் பாய் என பலமுகங்களாக மலையாள சினிமாவில் உன்னி முகுந்தன் வலம் வருகிறார். ஆனால், ரொமான்ஸ் காட்சிக்கு நோ சொல்லும் நடிகரை பார்ப்பது ஆச்சர்யம் தான் என நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர். என் படத்தை குடும்பத்தோடு வந்து ரசிக்க வேண்டும். சக நடிகர்கள் ரொமான்ஸ் காட்சியில் நடிப்பதை தவறு என்று கூறவில்லை. எனக்கு அதில் விருப்பம் இல்லை என கட் சொல்கிறார் உன்னி முகுந்தன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X