ரஜினி மட்டும்தான் இந்தியாவின் ஒரேயொரு சூப்பர்ஸ்டார்.. கன்னட சூப்பர்ஸ்டார் உபேந்திரா திட்டவட்டம்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் பல ஆண்டுகளை கடந்த சூப்பர்ஸ்டாராகவே ரசிகர்களின் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்துள்ளனர். இவரது பல படங்கள் மிகப்பெரிய அளவில் மாஸ் ஹிட்டடித்து இவரை தொடர்ந்து சூப்பர்ஸ்டாராகவே இருக்க வைத்து வருகின்றன. தற்போது இளம் இயக்குநர்களுடன் அதிரடியாக இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார் ரஜினிகாந்த்.
கடந்த ஆண்டில் ரஜினிகாந்த் -நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் வெளியானது ஜெயிலர் படம். ரிடையர்ட் ஜெயிலராக இந்தப் படத்தில் அமைதியான மற்றும் அட்டகாசமான நடிப்பை வழங்கியிருந்தார் ரஜினிகாந்த். இந்தப் படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்து வசூலிலும் மிகச்சிறப்பாக அமைந்தது.

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் பல ஆண்டுகளை கடந்து சூப்பர்ஸ்டாராக ரசிகர்களின் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்துள்ளார். இந்த சூப்பர்ஸ்டார் பட்டத்திற்கு பல போட்டிகள் இருந்த நிலையிலும் அதை எப்போதும் தனக்கானதாக இருத்தி வருகிறார் ரஜினிகாந்த். சமீபத்தில் இளம் இயக்குநர்களுடன் இணைந்து அடுத்தடுத்த வெற்றிப்படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இணைந்து ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார் ரஜினிகாந்த். இந்தப் படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது. சிறப்பான வரவேற்பையும் பெற்றிருந்தது. இந்நிலையில் அடுத்ததாக டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
கூலி படத்தில் உபேந்திரா: லைகா நிறுவன தயாரிப்பாள உருவாகியுள்ளது வேட்டையன் படம். இந்தப் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதையொட்டி அடுத்தடுத்த பிரமோஷன்களை படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் அடுத்தடுத்த சூட்டிங் ஐதராபாத், சென்னை ஆகிய இடங்களில் நடந்து வருகின்றன. படத்தின் பாடல் காட்சிகளின் சூட்டிங் நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது படத்தில் பிரபல கன்னட நடிகர் உபேந்திரா இணைந்துள்ளார். அவர் படத்தில் ரஜினிக்கு வில்லனாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
உபேந்திரா கொடுத்த அதிரடி பதில்: இந்நிலையில் இந்திய அளவில் ஒரேயொரு சூப்பர்ஸ்டார் தான், அது ரஜினிகாந்த தான் என்று உபேந்திரா பேட்டியொன்றில் கூறியுள்ளார். நடிகை ஸ்ரேயாவுடன் இணைந்து அவர் படத்தின் பிரமோஷனுக்காக பேசியிருந்த நிலையில், ஸ்ரேயா, தமிழ் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கன்னட சூப்பர்ஸ்டார் உபேந்திரா இருவருடனும் ஜோடியாக நடித்துள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்க முடியாமல் ஸ்ரேயா திணறிய நிலையில், அவருக்கு பதிலாக உபேந்திரா இந்தக் கேள்விக்கு பதிலளித்தார்.
ஒரேயொரு சூப்பர்ஸ்டார்: இந்தியாவில் ஒரேயொரு சூப்பர்ஸ்டார்தான் என்றும் அது ரஜினிகாந்த் தான் என்றும் உபேந்திரா இந்தக் கேள்விக்கு சிறிதும் தயக்கமின்றி பதிலளித்துள்ளார். ரஜினிகாந்த் படங்களில் அடுத்தடுத்த கன்னட நடிகர்கள் இணைந்து நடித்து வருகின்றனர். முன்னதாக ஜெயிலர் படத்தில் சிவராஜ்குமார் சில காட்சிகளிலேயே நடித்திருந்தாலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தார். இந்நிலையில் உபேந்திராவின் பிரசென்ஸ் கூலி படத்தின் மாஸிற்கு மிகப்பெரிய அளவில் துணையாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். முன்னதாக விஷாலின் சத்யம் படத்தில் உபேந்திரா முன்னணி கேரக்டரில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











