அப்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு.. 12 வருஷ கேப்.. மீண்டும் உச்சநடிகருடன் இணையும் நகைச்சுவை நடிகர்!

Recommended Video

Vadivel and Ajith in Valimai movie | 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அஜித்துடன் இணையும் வடிவேலு

சென்னை: தமிழ் சினிமாவில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு நகைச்சுவை நடிகர் ஒருவரும் முன்னணி நட்சத்திர நடிகர் ஒருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர்.

நடிகர் அஜித் இந்த ஆண்டு விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார். இரு படங்களும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் அஜித்தின் 60வது படமான வலிமை படத்தை, நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய ஹெச் வினோத் இயக்குகிறார். அப்படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர்தான் வலிமை படத்தையும் தயாரிக்கிறார்.

முக்கிய தகவல்

முக்கிய தகவல்

அஜித் ரெடியானவுடன் படத்தின் ஷுட்டிங் தொடங்கும் என்று அண்மையில் கூறியிருந்தார் படத்தின் புரொடியூசரான போனி கபூர். இந்நிலையில் வலிமை படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

ராஜா படத்தில்

ராஜா படத்தில்

அதாவது வலிமை படத்தில் அஜித்துடன் வைகைப்புயல் வடிவேலு இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 12 ஆண்டுகளுக்கு முன்பு எழில் இயக்கத்தில் ராஜா திரைப்படத்தில் அஜித்தும் வடிவேலுவும் இணைந்து நடித்தனர்.

கருத்து வேறுபாடு

கருத்து வேறுபாடு

அப்போது இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக செய்திகள் பரவின. இதன் பின்னர் இணைந்து நடிப்பதை இருவரும் தவிர்த்து வந்தனர். இதனால் அதன்பிறகு இவர்கள் இருவரின் கூட்டணியிலும் ஒரு படம் கூட வெளிவரவில்லை.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

இந்நிலையில், 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அஜித் மற்றும் வடிவேல் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 2011ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு நடிகர் வடிவேல் அதிக பட வாய்ப்புகள் இன்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X