Just In
- 21 min ago
தர்பார் இசை வெளியீட்டு விழா.. அந்த மூணாவது குட்டிக் கதை யாருக்குத் தெரியுமா?
- 50 min ago
பரிட்சைக்கு பயந்து சென்னைக்கு ஓடிவந்த ரஜினி.. ரயில்வே ஸ்டேஷனில் நடந்த சுவாரசிய சம்பவம்!
- 2 hrs ago
ஓவரா ஃபீல் பண்ணும் சிவகார்த்திகேயன்.. எல்லாம் என்ன விஷயம் தெரியுமா?
- 3 hrs ago
சிவனோட சிட்டிங்.. எமனோட கட்டிங் போட்டவர் ரஜினிகாந்த்.. பட்டைய கிளப்பிய விவேக்!
Don't Miss!
- News
டெல்லி தீ விபத்து.. 11 பேரை காப்பாற்றிய ரியல் ஹீரோ 'தீயணைப்பு வீரர் ராஜேஸ் சுக்லா'! அமைச்சர் நன்றி
- Sports
கடும் நெருக்கடி.. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் உயர் பதவியில் அமர்ந்த முன்னாள் கேப்டன்!
- Finance
மாருதி சுசூகியில் இப்படி ஒரு பிரச்சனையா.. 1 லட்சம் கார்களை திரும்ப பெற போகிறார்களாம்..!
- Technology
நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு கிடைத்துள்ள புதிய வசதி.!
- Automobiles
எடப்பாடியின் கையொப்பத்திற்காக நீண்ட நாளாக காத்திருக்கும் கோப்பு... இது போதும் தமிழர்களை குஷிப்படுத்த
- Lifestyle
இந்த வாரம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட தேவதையோட ஆசி கிடைக்கும்..
- Education
திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அப்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு.. 12 வருஷ கேப்.. மீண்டும் உச்சநடிகருடன் இணையும் நகைச்சுவை நடிகர்!
சென்னை: தமிழ் சினிமாவில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு நகைச்சுவை நடிகர் ஒருவரும் முன்னணி நட்சத்திர நடிகர் ஒருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர்.
நடிகர் அஜித் இந்த ஆண்டு விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார். இரு படங்களும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் அஜித்தின் 60வது படமான வலிமை படத்தை, நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய ஹெச் வினோத் இயக்குகிறார். அப்படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர்தான் வலிமை படத்தையும் தயாரிக்கிறார்.
பெண் ஹல்க்காக இவங்க நடிச்சா நல்லா இருக்கும்.. டெசா தாம்சன் தான் ஹல்க்கின் சாய்ஸ்!

முக்கிய தகவல்
அஜித் ரெடியானவுடன் படத்தின் ஷுட்டிங் தொடங்கும் என்று அண்மையில் கூறியிருந்தார் படத்தின் புரொடியூசரான போனி கபூர். இந்நிலையில் வலிமை படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

ராஜா படத்தில்
அதாவது வலிமை படத்தில் அஜித்துடன் வைகைப்புயல் வடிவேலு இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 12 ஆண்டுகளுக்கு முன்பு எழில் இயக்கத்தில் ராஜா திரைப்படத்தில் அஜித்தும் வடிவேலுவும் இணைந்து நடித்தனர்.

கருத்து வேறுபாடு
அப்போது இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக செய்திகள் பரவின. இதன் பின்னர் இணைந்து நடிப்பதை இருவரும் தவிர்த்து வந்தனர். இதனால் அதன்பிறகு இவர்கள் இருவரின் கூட்டணியிலும் ஒரு படம் கூட வெளிவரவில்லை.

மகிழ்ச்சி
இந்நிலையில், 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அஜித் மற்றும் வடிவேல் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 2011ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு நடிகர் வடிவேல் அதிக பட வாய்ப்புகள் இன்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.