உடல்நலக்குறைவால் மரணமடைந்த நடிகர் வடிவேல் பாலாஜி.. நுங்கம்பாக்கம் இடுகாட்டில் உடல் அடக்கம்!

சென்னை: மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜியின் உடல் நுங்கம்பாக்கம் இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

பிரபல சின்னத்திரை நடிகரான வடிவேல் பாலாஜி உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது உடல் சேத்துப்பட்டு எம்எஸ் நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

தனது நகைச்சுவையால் பலரையும் சிரிக்க வைத்த வடிவேல் பாலாஜியின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். ரசிர்களும் பிரபலங்களும் அவரது உடலுக்கு நேற்று முதலே அஞ்சலி செலுத்தி வந்தனர்.

கண்ணீர் மல்க

கண்ணீர் மல்க

பிரபல நடிகராய் உயர்ந்த போதும், அப்பகுதி மக்களிடம் சாதாரணமாக பழகிய வடிவேல் பாலாஜியின் மறைவு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவயது முதலே தங்களோடு ஒருவராக இருந்த வடிவேல் பாலாஜியின் மறைவு பேரதிர்ச்சியாக உள்ளது என அப்பகுதி மக்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

விடிய விடிய அஞ்சலி

விடிய விடிய அஞ்சலி

எல்லோரையும் சிரிக்க வைத்த அந்த கலைஞன் தற்போது இல்லை என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என அப்பகுதி மக்கள் வேதனையை வெளிப்படுத்தினர். நேற்று பிற்பகல் முதல் விடிய விடிய வடிவேல் பாலாஜியின் ரசிகர்களும் நண்பர்களும் அஞ்சலி செலுத்தி வந்தனர்.

ரோபோ ஷங்கர்..

ரோபோ ஷங்கர்..

விஜய் டிவி பிரபலங்களான ராமர், பாலாஜி, பாலா உள்ளிட்ட பலரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். நடிகர் ரோபோ ஷங்கர் தனது மனைவியுடன் வந்து அவரது உடலுக்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

இதேபோல் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதியும் வடிவேல் பாலாஜியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறிய விஜய் சேதுபதி நிதியுதவியும் அளித்தார்.

இறுதிச்சடங்கு

இறுதிச்சடங்கு

அவரை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் உள்ளிட்ட பலரும் வடிவேல் பாலாஜியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் இன்று பிற்பகல் வடிவேல் பாலாஜியின் இறுதிச்சடங்கு நடைபெற்றது.

ஆம்புலன்ஸில் ஊர்வலம்

ஆம்புலன்ஸில் ஊர்வலம்

இறுதியாக அவரது முகத்தை பார்த்து அவரது குடும்பத்தாரும் நண்பர்களும் கதறியது கலங்கச் செய்தது. அவரது வீடு அமைந்திருக்கும் சேத்துப்பட்டில் இருந்து நுங்கம்பாக்கம் இடுகாட்டிற்கு அவரது உடல் ஆம்புலன்ஸில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

உடல் அடக்கம்

உடல் அடக்கம்

வடிவேல் பாலாஜியின் இறுதி ஊர்வலத்தில் அவரது நண்பர்களும் நூற்றுக்கணக்கான ரசிகர்களும் பங்கேற்றனர். சுமார் ஒரு மணி நேர ஊர்வலத்திற்கு பிறகு நுங்கம்பாக்கம் இடுகாட்டில் வடிவேல் பாலாஜியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X