நடிகர் வடிவேல் பாலாஜியின் மரணத்திற்கான காரணம் என்ன? குடும்பத்தினர் பகீர் குற்றச்சாட்டு!

சென்னை: நடிகர் வடிவேல் பாலாஜியின் மரணத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

நடிகர் வடிவேல் பாலாஜி நேற்று பகல் 12 மணியளவில் உடல் நலக்குறைவால திடீர் மரணமடைந்தார். அவரது மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சேத்துப்பட்டில் மனைவி மகன் மகள் என குடும்பத்துடன் வசித்து வந்தார் வடிவேல் பாலாஜி. 45 வயதான வடிவேல் பாலாஜிக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

12 நாட்களுக்கு மேல்

12 நாட்களுக்கு மேல்

இதனால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 12 நாட்களுக்கு மேலாக அங்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார் நடிகர் வடிவேல் பாலாஜி.

அரசு மருத்துவமனை

அரசு மருத்துவமனை

ஆனால் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து அவரை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் குடும்பத்தினர். அங்கு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதால், ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.

பணக்கஷ்டம் இல்லை

பணக்கஷ்டம் இல்லை

இதனால் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் குடும்பத்தினர். இந்நிலையில் பணக் கஷ்டத்தால்தான் வடிவேல் பாலாஜி, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று வெளியான தகவலை குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.

முறையான சிகிச்சையில்லை

முறையான சிகிச்சையில்லை

மாறாக.. வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்த 12 நாட்களில் 18 முதல் 20 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ததாகவும் ஆனால் வடிவேல் பாலாஜிக்கு தனியார் மருத்துவமனை முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

அலட்சியமான சிகிச்சை

அலட்சியமான சிகிச்சை

வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையின் அலட்சியமான சிகிச்சையாலேயே அவர் உயிரிழந்தாகவும் பணம் இல்லாததால் அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக பொய்யான தகவல் பரவி வருகிறது என்றும் தெரிவித்தனர்.

Recommended Video

Vadivel Balaji பார்த்த பிறகு எனக்கு தூக்கமே வரல | Tamil Filmibeat
உடல் அடக்கம்

உடல் அடக்கம்

பணத்தை பறிக்க தனியார் மருத்துவமனை முயற்சி செய்ததாலேயே இறுதியில் அரசு மருத்துவமனையை நாடிச் சென்றதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர். நடிகர் வடிவேல் பாலாஜியின் இறுதி சடங்கு இன்று மாலை நடைபெற்றது. நுங்கம்பாக்கம் இடுகாட்டில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X