வடிவேலுவுக்கு ஆரம்பமானது அடுத்த பிரச்சனை.. மனுஷன் இதை எப்படி சமாளிக்கப் போகிறாரோ?

சென்னை: நடிகர் வடிவேலு மீதான தடையை சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கம் நீக்கிய நிலையில், லைகா தயாரிப்பில் நடிக்க உள்ளார்.

பழைய பஞ்சாயத்து பல காலம் கழித்து இப்போது தான் முடிவுக்கு வந்த நிலையில், அடுத்து ஒரு புதிய பஞ்சாயத்து அவரை சுற்றி ஆரம்பித்து இருக்கிறது.

தலைநகரம் படத்தில் இடம்பெற்ற 'நாய் சேகர்' டைட்டிலில் அவர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அந்த படம் அப்படியே நின்று போக அந்த டைட்டிலில் தற்போது காமெடி நடிகர் சதீஷ் நடித்து வருவது தான் இந்த புதிய பிரச்சனைக்கு காரணமாம்.

ஷங்கருக்கு நஷ்டம்

ஷங்கருக்கு நஷ்டம்

இம்சை அரசன் 24ம் புலிகேசி படம் ஆரம்பிக்கப்பட்டு சில கோடிகள் செலவு செய்து ஷங்கர் போட்ட செட்டை எல்லாம் வீணாக்கிய நிலையில், வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் ஷங்கர் கொடுத்த புகாரின் பேரில் அவருக்கு தடை போடப்பட்டது. அதன் பின்னர் நடிகர் வடிவேலுவால் எந்தவொரு புதிய படத்திலும் நடிக்க முடியவில்லை.

யாராலும் நிரப்ப முடியவில்லை

யாராலும் நிரப்ப முடியவில்லை

நீண்ட காலமாக வடிவேலுவால் படங்களில் நடிக்க முடியாமல் போனாலும், தொடர்ந்து ரசிகர்கள் அவருக்கு கொடுத்து வந்த ஆதரவு காரணமாக வடிவேலுவின் மார்க்கெட் அப்படியே நிலைத்து நிற்கிறது. புதிதாக வந்த காமெடியன்களாலும் இன்னமும் வடிவேலுவின் இடத்தை நிரப்ப முடியாமல் உள்ளதால் மீண்டும் அவரை பலரும் அழைக்க ஆரம்பித்துள்ளனர்.

முடிவுக்கு வந்த பஞ்சாயத்து

முடிவுக்கு வந்த பஞ்சாயத்து

இந்நிலையில், நடிகர் வடிவேலுவை வைத்து புதிதாக படத்தை தயாரிக்க நினைத்த லைகா நிறுவனம் ஷங்கருடன் சுமூக பேச்சுவார்த்தை நடத்த ஏற்கனவே சென்று கொண்டிருந்த இந்தியன் 2 பிரச்சனையையும் முடிவுக்கு கொண்டு வந்து வடிவேலுவின் பிரச்சனையையும் முடித்துக் கொண்டார்.

மீம் கிரியேட்டர்களுக்கு நன்றி

மீம் கிரியேட்டர்களுக்கு நன்றி

மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ள சந்தோஷத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்ட வடிவேலு தன்னை இத்தனை காலம் உயிர்ப்புடன் வைத்துக் கொண்ட மீம் கிரியேட்டர்களுக்கு ரொம்ப நன்றி எனக் கூறினார். சீக்கிரமே பழைய வடிவேலுவின் அதகளத்தை ரசிகர்கள் காண்பார்கள் என்றும் உறுதி அளித்துள்ளார்.

அடுத்த பிரச்சனை

அடுத்த பிரச்சனை

தயாரிப்பாளர் சங்கம் போட்ட தடையை ஒரு வழியாக நீக்கிக் கொண்ட நிலையில், தற்போது நடிகர் வடிவேலுவுக்கு புதிய தலைவலி உருவாகி இருக்கிறது. அது என்னவென்றால் 'நாய் சேகர்' பட டைட்டில் விவகாரம் தான். ஏற்கனவே இதே டைட்டிலில் புதிய படமொன்றில் வடிவேலு நடிக்க இருந்த நிலையில், அந்த டைட்டிலில் தற்போது வேறு ஒரு படம் உருவாகி வருகிறது.

நாய் சேகர்

நாய் சேகர்

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் சதீஷ் ஹீரோவாக நடித்து வரும் புதிய படத்திற்கு 'நாய் சேகர்' என்றே டைட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது. நடிகர் வடிவேலு முறைப்படி அந்த டைட்டிலை பதிவு செய்யாத நிலையில், ஏஜிஎஸ் நிறுவனம் பக்காவாக அதனை பதிவு செய்து படத்தை உருவாக்கி வருகிறது. இந்த படத்தில் சதீஷுக்கு ஜோடியாக குக் வித் கோமாளி பவித்ரா லக்‌ஷ்மி ஹீரோயினாக நடித்து வருகிறார்.

அதுக்கு ஓனர் நான்தான்

அதுக்கு ஓனர் நான்தான்

மீண்டும் சினிமாவில் வடிவேலு நடிக்க வருவதற்குள் இந்த படத்தை வெளியிட்டு விடலாம் என நினைத்த ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு வடிவேலுவின் ரீ என்ட்ரி காரணமாக பெரிய சிக்கல் உருவாகி உள்ளது. தலைநகரம் படத்தில் நாய் சேகர் கதாபாத்திரத்தில் நடித்து கலக்கிய வடிவேலு, அந்த டைட்டிலுக்கு ஓனர் நான் தான் எனக்கு அந்த டைட்டிலை கொடுத்துடுங்க என ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு கண்டிஷன் போட்டு கோரிக்கை வைத்து உள்ளாராம்.

என்னவாகும்

என்னவாகும்

ஒரு பிரச்சனையில் இருந்து இத்தனை காலத்திற்கு பிறகு தப்பித்த வடிவேலுவுக்கு அடுத்த டைட்டில் பிரச்சனை ஆரம்பித்து இருக்கிறது. ஏஜிஎஸ் நிறுவனம் முறையாக டைட்டிலை பதிவு செய்துள்ள நிலையில், மீண்டும் அந்த டைட்டில் வடிவேலுக்கு கிடைக்குமா? இல்லை இந்த விவகாரம் எங்கே போய் முடியும் என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X