சோனமுத்தா போச்சா..வடிவேலுவுக்கு வழங்கப்பட்டது போலிடாக்டர் பட்டம்..வெளியானது அதிர்ச்சிதரக்கூடிய உண்மை
சென்னை: நடிகர் வடிவேலுவுக்கும், இசையமைப்பாளர் தேவாவுக்கும் வழங்கப்பட்டது போலி டாக்டர் பட்டம் என்ற உண்மை தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ்கிரணின் அரண்மனை கிளி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வடிவேலு. கவுண்டமணி, செந்தில் ஆகியோர் கோலோச்சி இருந்த காலத்தில் உள்ளே நுழைந்து ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்தவர். பின்பு தனது திறமையை வளர்த்துக்கொண்ட வடிவேலு படிப்படியாக முன்னேறினார்.

வடிவேலு ஒரு நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல
நகைச்சுவை நடிகராக வளர்ந்துகொண்டிருந்த காலத்திலேயே வெறும் நகைச்சுவை நடிகராக மட்டும் தன்னை உருவாக்கிக்கொள்ளவில்லை வடிவேலு. மாறாக நடனம் ஆடுவது, பாடல்கள் பாடுவது, குணச்சித்திர வேடத்தில் நடிப்பது எனவும் பல்வேறு தன்னை நிரூபித்தார். குறிப்பாக எந்த அளவுக்கு தனது நகைச்சுவையால் சிரிக்க வைப்பாரோ அதே அளவு தனது குணச்சித்திர நடிப்பால் கலங்க வைக்கவும் செய்வார் வடிவேலு.

வடிவேலு உருவாக்கிய சாம்ராஜ்ஜியம்
90களின் இறுதியில் வடிவேலுவின் சாம்ராஜ்ஜியம் ஆரம்பித்தது. தனது உடல்மொழியாலும், தன்னை தானே மட்டம் தட்டிக்கொண்டு செய்த காமெடியாலும் பலரது மனங்களிலும் நுழைந்து நாற்காலி போட்டு அமர்ந்துகொண்டார். சந்திரமுகி படம் ஆரம்பிக்கும்போது வடிவேலுவின் கால்ஷீட்டை வாங்கிவிடுங்கள் என ரஜினியே பி.வாசுவிடம் கூறும் அளவுக்கு பிஸியாக இருந்தார் வடிவேலு. பெரிய ஹீரோக்கள், சிறிய ஹீரோக்கள் என யாருடன் கூட்டணி போட்டாலும அந்த காமெடி மிகப்பெரிய ஹிட்டடித்தது.

பிரச்னையை சந்தித்த வடிவேலு
நிலைமை சீராக சென்றுகொண்டிருக்க 2011 தேர்தலின்போது அரசியல் மேடையில் ஏறினார் வடிவேலு. அதன் பிறகு அவருக்கு பிரச்னைகள் ஆரம்பிக்க ஒருகட்டத்தில் சினிமாவிலிருந்து முழுதாக ஒதுக்கப்பட்டார். இந்தச் சூழலில் அவரை சுற்றி இருந்த பிரச்னைகளும், பஞ்சாயத்துக்களும் பேசி தீர்க்கப்பட்டு மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறார். அந்தவகையில் மாமன்னன் படத்ஹ்டில் நடித்துவருகிறார். அதேபோல் ஹீரோவாக நாய் சேகர் படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை.

வடிவேலுவுக்கு டாக்டர் பட்டம்
இந்நிலையில் நடிகர் வடிவேலுவுக்கு சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியதாக செய்திகள் வெளியாகின. மேலும், இசையமைப்பாளர் தேவா, நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர் உள்ளிட்டோருக்கும் இந்தப் பட்டமானது வழங்கப்பட்டது.
ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் இந்தப் பட்டத்தை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் அண்ணா பல்கலைக்கழகம் என்ற பெயரை அச்சிட்டிருந்தனர். இதனால் அண்ணா பல்கலைக்கழகம் தங்களுக்கு டாக்டர் பட்டம் வழங்குவதாக விருது பெற்றவர்கள் நம்பினார்கள்

வடிவேலுவுக்கு வழங்கியது போலி டாக்டர் பட்டம்
ஆனால் வடிவேலு, தேவா உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட கௌரவ டாக்டர் பட்டம் போலியானது என்பது இப்போது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கூறுகையில், வடிவேலுவுக்கும், தேவாவுக்கும் டாக்டர் பட்டத்தை நாங்கள் வழங்கவில்லை. ஓய்வு பெற்ற நீதிபதியையும், அண்ணா பல்கலைக்கழகத்தையும் ஏமாற்றியுள்ளனர். இதுதொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் என கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











