Karur Stampede : ஐய்யோ.. பிஞ்சு உசுருங்க போச்சே.. கண்ணீரில் வடிவேலு சொன்ன அந்த வார்த்தை

கரூர்: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நேற்றைய நாளை தொடங்கும் போது அவரது பிரச்சாரத்தால் 39 உயிர்கள் போகும் என்று துளி அளவும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். ஆனால் நேற்றைய நாள் முடியும் போது, கரூரில் அவர் பிரச்சாரம் செய்தபோது, அதில் கலந்து கொண்ட தவெக தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் என குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட மொத்தம் 39 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்களின் உயிரிழப்புக்கு காரணம் கூட்ட நெரிசல் தான் என்று கூறப்படுகிறது.

இப்படி இருக்கும்போது இந்த துயரச் சம்பவம் மொத்த தமிழ்நாட்டையும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் ஆளாக்கியுள்ளது. இந்த துயரச் சம்பவம் தொடர்பாக அரசியல் தலைவர்கள் தொடங்கி, திரைப்பிரபலங்கள் பொதுமக்கள் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் வடிவேலு இந்தத் துயர சம்பவம் தொடர்பாக தனது எண்ணத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

Actor Vadivelu And Soori Bust Out Their Condolences For TVK Vijay Karur Stampede Deaths

வடிவேலு கண்ணீர்: அவர், " கரூரில் நடந்த துயர சம்பவத்தை கேட்ட பொழுதில் இருந்து நெஞ்சை உலுக்குகிறது. இறந்து போன இளைஞர்கள், பெரியவர்கள் மற்றும் பிஞ்சுக் குழந்தைகளை நினைத்து கண்ணீர் கொட்டுகிறது. இனி ஒரு உயிர் கூட போகக் கூடாது என்று தெய்வங்களை வேண்டிக் கொள்கிறேன். உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று உதவும் முதலமைச்சரை பார்த்து மக்களைப் போல நானும் ஆறுதல் அடைகிறேன்" என்று தெரிவித்துள்ளார். இவரது கருத்து பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

சூரி: அதேபோல் நடிகர் சூரி தனது எக்ஸ் பக்கத்தில், " கரூரில் நிகழ்ந்த இந்த மனதை உறைய வைக்கும் விபத்து அனைவரையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் ஆன்மா இறைவனின் திருவடியில் நிம்மதியும் அமைதியும் பெற பிரார்த்திக்கிறோம். மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்கள் இறைவன் கருணையால் விரைவில் முழு நலம் பெற வேண்டுகிறோம். இந்த வேதனை நிறைந்த தருணத்தில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நம் இதயப்பூர்வமான அனுதாபங்களைத் தெரிவித்து, மனதாலும் செயலாலும் அவர்களுக்கு தோள் கொடுப்போம். எனது ஆழ்ந்த இரங்கல்கள்" என்று பதிவிட்டு தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். இவர்களது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. மேலும் பல திரைப்பிரபலங்கள் இந்த துயரச் சம்பவம் தொடர்பாக தங்களது வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X