நடிகர் வடிவேலுவின் தம்பி இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? கடைசி காலத்தில் செய்த வேலை இதுதானா..!

சென்னை: நடிகர் வடிவேலுவின் தம்பி ஜெகதீஸ்வரன் இன்று உடல் நலக்குறைவின் காரணமாக மரணம் அடைந்திருக்கிறார்.

அவருடைய இறப்பிற்கு பல பிரபலங்கள் வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் வடிவேலுவின் தம்பி பேசிய பழைய வீடியோஸ் வைரலாகி வருகிறது.

Actor Vadivelu Brother Death Jagadeeswaran has acted in so many films

அதுபோல நடிகர் வடிவேலுவின் தம்பி சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். கடைசி காலத்தில் அவர் பார்த்து வந்த வேலை குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

நடிகர் வடிவேலுவுக்கு பெரிய அளவில் அறிமுகமே தேவை இல்லை. அவர் பல வருடங்களாக சினிமாவில் காமெடி நடிகராக நடித்து தற்போது புகழின் உச்சத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆரம்ப காலத்தில் தன்னுடைய வாய்ப்புக்காக பல போராட்டங்களை தாண்டி வந்த வடிவேலு இப்போது முன்னணி நடிகராக மாறி இருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்புதான் வடிவேலுவின் தாயார் மரணமடைந்து இருந்தார். அதைத்தொடர்ந்து இன்று அவருடைய தம்பியும் மரணமடைந்திருக்கிறார். அதே நேரத்தில் வடிவேலுவின் தம்பி பற்றிய பல தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதாவது வடிவேலுவின் சொந்த ஊர் சிவகங்கை தானாம். அங்கு வடிவேலுவின் தந்தை கண்ணாடி கடை வைத்திருந்திருக்கிறார்.

பிறகு வேலை விஷயமாகத்தான் சிவகங்கையில் இருந்து மதுரையில் குடிபெயர்ந்து இருந்தார்களாம். வடிவேலுவின் உடன் பிறந்தவர்கள் ஆறு சகோதர சகோதரிகளாம். அதில் வடிவேலு தான் மூத்தவராம்.வடிவேலுவுக்கு இரண்டு சகோதரிகள் இருக்கிறாராம். அவர்கள் இருவருக்குமே வடிவேலு தான் திருமணம் செய்து வைத்திருந்தாராம்.

அதுபோல இன்று இறந்த வடிவேலுவின் சகோதரர் ஜெகதீஸ்வரருக்கும் வடிவேலு தான் முன் நின்று திருமணம் செய்து வைத்திருந்தாராம். சமீபத்தில் சில வருடங்களுக்கு முன்பு கூட வடிவேலுவுக்கும் அவருடைய சகோதரருக்கும் சொத்து தகராறு காரணமாக சில பிரச்சனைகள் எழுந்தது. செய்தி சேனல்கள் வரைக்கும் தெரிந்தது.

ஆனால் அதற்கு பின்பும் பேட்டிகளில் தன்னுடைய அண்ணனை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காமல் வடிவேலுவின் தம்பி ஜெகதீஸ்வரன் பெருமையாக பேசி இருக்கிறார். அதுபோல வடிவேலுவின் தம்பி ஜெகதீஸ்வரன் "மலைக்கோவில் தீபம், காதல் அழிவதில்லை" என்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருக்கிறார்.

அதற்கு பிறகு தனக்கு சில வாய்ப்புகள் வந்தது. ஆனால் தான் அதில் நடிக்க முடியாமல் ஆகிவிட்டது என்று அந்த பேட்டியில் பேசியிருக்கிறார். அதோடு வடிவேலு சினிமாவிற்கு வருவதற்கு முன்பு தன்னுடைய தந்தை வைத்திருந்தது போலவே கண்ணாடி கடை தான் வைத்திருந்தாராம். ஆரம்பத்தில் ஜெகதீஸ்வரனும் அது போல கண்ணாடி கடை தான் வைத்திருந்தாராம்.

ஆனால் சமீப காலமாக ரெடிமேட் ஷார்ட்ஸ் வாங்கி விற்கும் பிசினஸ் செய்து வந்ததாக கூறியிருக்கிறார். அத்தோடு வடிவேலு சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜத்தில் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும் போது காமெடியாக தான் பேசுவார். அது எல்லோரையும் சிரிக்க வைக்கும். நான் நடிக்கவில்லை என்றாலும் அண்ணன் தொடர்ச்சியாக நடிப்பது சந்தோசம் தான்.

சில வருடங்களாக அண்ணன் நடிக்காமல் இருந்தார். இப்போது மீண்டும் நடிக்க தொடங்கி இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று அந்த வீடியோவில் நடிகர் வடிவேலுவின் தம்பி ஜெகதீஸ்வரன் பேசியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X