»   »  'அந்தக் கடையை மூடுங்க'... விஜயகாந்த் குறித்த கேள்விக்கு வடிவேலுவின் பதில் இது!

'அந்தக் கடையை மூடுங்க'... விஜயகாந்த் குறித்த கேள்விக்கு வடிவேலுவின் பதில் இது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜயகாந்த் பற்றிக் கேட்டதற்கு 'அந்தக் கடையை மூடுங்க' என நகைச்சுவை நடிகர் வடிவேலு தெரிவித்திருக்கிறார்.

மழை, வெயிலைப் பொருட்படுத்தாமல் தமிழகம் முழுவதும் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். 1 மணி நிலவரப்படி 42.1% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.

Actor Vadivelu Casting his Vote

திரை நட்சத்திரங்கள் பலரும் வாக்களித்து தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர். சென்னை விருகம்பாக்கத்தில் நடிகர் வடிவேலு தனது வாக்கினைப் பதிவு செய்தார்

வாக்குப்பதிவிற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய வடிவேலு ''ரொம்ப அற்புதமான தேர்தல் இது. பரீட்சை எழுதிவிட்டு முடிவுக்காகக் காத்திருப்பது போல இந்தத் தேர்தல் அனைவருக்கும் அமைந்துள்ளது.

ஓட்டுச் சாவடிக்கு சென்று தலையை செம்மறி ஆடுபோல நன்றாக 3 முறை சிலுப்பிவிட்டு தெளிவாக ஓட்டுப் போடுங்கள்.நன்கு சிந்தித்து நம்ம நாட்டுக்கு நல்லது செய்பவர்களுக்கு உங்கள் வாக்கினை அளியுங்கள்.

100% எல்லோரும் ஓட்டுப் போட வேண்டும். ஓட்டுப் போட்டு அனைவரும் நமது ஜனநாயக் கடமையை ஆற்ற வேண்டும். கள்ள ஓட்டு தவிர'' என்று கூறினார்.

பத்திரிக்கையாளர் ஒருவர் விஜயகாந்த் பற்றி கேட்டதற்கு 'அந்தக் கடையை மூடுங்க' என்று சிரித்துக்கொண்டே கூறிய வடிவேலு, பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Read more about: vadivelu, வடிவேலு
English summary
Actor Vadivelu Casted his Vote in Virugambakkam on Monday.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos