தெய்வீக சிரிப்பு.. இயக்குநர் சுராஜ் உடன் கேக் வெட்டி கொண்டாடிய வடிவேலு.. தீயாய் பரவும் புகைப்படம்!

சென்னை: நகைச்சுவை நடிகர் வடிவேலு இன்று தனது பிறந்தநாளை இயக்குநர் சுராஜ் உடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

சினிமாவில் இனி வடிவேலு நடிக்கவே முடியாதபடி போடப்பட்ட தடை ஒரு வழியாக பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், மீண்டும் நடிக்கப் போகிறோம் என்கிற உற்சாகத்தில் சந்தோஷமாக கேக் வெட்டி தனது பிறந்தநாளை நடிகர் வடிவேலு கொண்டாடி உள்ளார்.

காமெடி கிங்

காமெடி கிங்

இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் அரசனாக நடித்தது போலவே நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவின் காமெடி கிங் என்று தான் சொல்ல வேண்டும். தனது நடிப்பாலும், பேச்சாலும், உடல் மொழியாலும் ரசிகர்களை பல ஆண்டுகள் வயிறு குலுங்க சிரிக்க வைத்த பெருமைக்கு சொந்தக்காரரான வடிவேலுவின் 61வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

கோடான கோடி ரசிகர்கள்

கோடான கோடி ரசிகர்கள்

இயக்குநர் சேரன், நடிகை பிரியா பவானி சங்கர், நடிகர் ஹரிஷ் கல்யாண் என ஏகப்பட்ட பிரபலங்களும் வைகை புயல் வடிவேலுக்கு சமூக வலைதளங்களில் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி ட்வீட்களை போட்டு வருகின்றனர். மேலும், வடிவேலுவின் கோடான கோடி ரசிகர்களும் தங்கள் தலைவனை டிரெண்ட் செய்து இணையத்தை அதிர வைத்து வருகின்றனர்.

வடிவேலு ரிட்டர்ன்ஸ்

வடிவேலு ரிட்டர்ன்ஸ்

மம்மி ரிட்டர்ன்ஸ் போல வடிவேலுவின் ரிட்டர்ன்ஸை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இயக்குநர் ஷங்கருக்கும் வடிவேலுவுக்கும் இடையே ஏற்பட்ட பட விவகார பஞ்சாயத்து லைகா தலையீட்டினால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. லைகா தயாரிப்பிலேயே புதிய படத்தில் நடிக்க தொடங்கி விட்டார் வடிவேலு.

லக்கி கேர்ள்

லக்கி கேர்ள்

எலி பட கெட்டப்பில் இருக்கும் நடிகர் வடிவேலுவுடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்த நடிகை பிரியா பவானி சங்கர் 'That Lucky Girl' என ட்வீட் போட்டு ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளார். இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கப் போகும் புதிய படத்தில் இவர் தான் ஜோடியா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. சீக்கிரமே அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுராஜ் இயக்கத்தில்

சுராஜ் இயக்கத்தில்

வடிவேலு நாய்சேகராக கலக்கிய தலைநகரம் படத்தை இயக்கிய இயக்குநர் சுராஜ் தனுஷின் படிக்காதவன், மாப்பிள்ளை உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். கடைசியாக 2016ம் ஆண்டு விஷாலின் கத்தி சண்டை படத்தை இயக்கிய அவர் அடுத்ததாக வடிவேலுவை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார்.

தெய்வீக சிரிப்பு

தெய்வீக சிரிப்பு

இயக்குநர் சுராஜ் உடன் இணைந்து தனது 61வது பிறந்தநாளை நடிகர் வடிவேலு கொண்டாடி உள்ளார். கேக் கட்டிங்கின் போது வடிவேலு சிரிக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகிறது. தெய்வீக சிரிப்பையா உமக்கு என வடிவேலுவின் ரசிகர்கள் கமெண்ட் செய்து ஷேர் செய்து வருகின்றனர்.

என்ன டைட்டில்

என்ன டைட்டில்

நாய் சேகர் டைட்டிலில் தான் இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்க உள்ள புதிய படம் உருவாகப் போவதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதே டைட்டிலில் ஏஜிஎஸ் தயாரிப்பில் நடிகர் சதீஷ் மற்றும் குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா லக்‌ஷ்மி நடித்து வரும் படமும் உருவாகி வருவதால் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கப் போகும் புதிய படத்திற்கு வேறு ஒரு சூப்பரான டைட்டிலை ஆலோசித்து வருவதாகவும் விரைவில் ஃபர்ஸ்ட் லுக் உடன் டைட்டிலும் வெளியாகும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X